மீன 2022 இல் குரு மார்க்கி: ஜோதிடத்தில், குரு பகவான் வியாழன் அறிவு, செல்வம் மற்றும் குழந்தைகளின் காரண கிரகமாக கருதப்படுகிறது. இது தவிர, வியாழன் யாருடைய ஜாதகத்தில் சுப ஸ்தானத்தில் இருக்கிறதோ, அவர்களின் வாழ்க்கையில் எல்லவற்ற வெற்றிகளைப் பெறுவார்கள் என்று கூறப்படும். அதேபோல் திருமண வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்பார்கள். எனவே கடந்த ஜூலை 29, 2022 முதல், குரு வியாழன் மீன ராசியில் பிற்போக்குத்தனமாக பயணித்து வருகிறார், இது பல ராசி அறிகுறிகளில் மோசமான விளைவை ஏற்படுத்தியது. ஆனால் வரும் நவம்பர் 24, 2022 குரு மார்க்கியாகப் போகிறது. குரு தனது சொந்த ராசியில் நேரடியாக சஞ்சரிப்பது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். அந்தவகையில் மார்க்கி குரு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருப்பார் என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்த ராசிக்காரர்களுக்கு குரு மார்க்கி செல்வ செழிப்பு மற்றும் அலுவலகத்தில் ப்ரமோஷனை தருவார்
ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வியாழனின் நேரடி சஞ்சாரம் மிகவும் சுப பலன்களைத் தரும். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். பெரிதும் பாராட்டப்படுவார். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரிகளும் லாபம் அடைவார்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். புதிய தொழிலை தொடங்க இதுவே சாதகமான நேரம். அதேபோல் திருமணம் நிச்சயிக்கப்படும்.
மேலும் படிக்க | சூரியன் சுக்கிரன் சேர்க்கை: அடுத்த 15 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம்
கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு வியாழன் பண மழையை பொழிவார். உங்களின் வருமானம் அதிகரிக்கும். இதனுடன், புதிய வருவாய் வழிகளும் உருவாக்கப்படும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த விரும்புவோருக்கு அல்லது புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு நவம்பர் 24க்கு பிறகு நல்ல நேரம். திருமண வாழ்வில் இனிமை இருக்கும்.
கன்னி ராசி: குரு பகவான் வியாழன் கன்னி ராசிக்காரர்களுக்கு உத்யோகத்தில் பதவி உயர்வு தருவார். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பொருளாதார பலன்கள் உண்டாகும். இழுத்துக்கொண்டு இருந்த பழைய வழக்குகள் தீர்வுக்கு வரும். பண நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்களுக்கு மார்க்கி குரு பண மழையை பொழிவார். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. சம்பள உயர்வு பெறலாம். வங்கி இருப்பு அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ