வருமானத்தில் எவ்வளவு தொகையை நன்கொடையாக வழங்கலாம்? விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!

Rules of donation: இந்து மதத்தில் தானம் செய்வது மகத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது.  தானம் செய்வதற்கும், புறக்கணிப்பதற்கும் சில சிறப்பு விதிகள் உள்ளன. அதனை தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - RK Spark | Last Updated : Mar 6, 2024, 01:40 PM IST
  • தானம் செய்வது யாகம் செய்வதற்குச் சமம்.
  • இது மகத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது.
  • இதற்கு சில விதிகளும் உள்ளன.
வருமானத்தில் எவ்வளவு தொகையை நன்கொடையாக வழங்கலாம்? விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்! title=

Rules of donation: இந்து மதத்தில் தானம் செய்வது பொதுவான ஒன்று ஆகும், சிலர் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனெனில், தானம் செய்வது ஒரு யாகம் செய்வதற்கு சமமாக பார்க்கப்படுகிறது என்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு யாகம் செய்தால் என்ன என்ன பலன் கிடைக்குமோ, அதே அளவு பலன் ஒருவருக்கு தானம் செய்வதன் மூலமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஒருவருக்கு தானம் செய்வதால் பல வகைகளில் நன்மைகள் கிடைப்பது மட்டும் இன்றி, பாவங்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.  ஒரு நபர் அவரது வருமானத்தில் எவ்வளவு தொகையை நன்கொடை வழங்க வேண்டும், எப்படி வழங்க வேண்டும் என்பதற்கும் விதிகள் உள்ளது.  

மேலும் படிக்க | மஹா சிவராத்திரி அன்று வாங்க வேண்டிய 3 பொருட்கள்..! வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் உறுதி

தானம் செய்வதற்கான சிறப்பு விதிகள் என்ன என்பதையும், வருமானத்தில் எவ்வளவு தொகையை தானம் செய்வது நல்லது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். உங்கள் வருமானத்தில் எவ்வளவு தொகையை நன்கொடையாக அளிக்க வேண்டும் என்பதற்கு இந்து மதத்தின்படி சில விதிகள் உள்ளது. ஒரு தனிநபர் அவரது சம்பளத்தில் இருந்து பத்தில் ஒரு பங்கை நன்கொடையாக அளிக்க வேண்டும். எந்த ஒரு வேலையில் இருந்தாலும், இந்த பத்தில் ஒரு பங்கை கொடுப்பது நல்லது என்று கருதப்படுகிறது. அதே சமயத்தில் தானம் செய்பவர் ஒரு விசயத்தை மனதில் கொள்ள வேண்டும். ஒரு நபர் தனது மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு சங்கடத்தை அல்லது வலியை ஏற்படுத்தி மற்றவர்களுக்கு தானம் செய்தால், அது அவருக்கு நல்லதை செய்யாது. மாறாக வாழ்நாள் முழுவதும் மற்றும் மரணத்திற்குப் பிறகும் கெட்டதை தருகிறது.

தானம் செய்வதற்கான சிறப்பு விதிகள்

சேவை செய்வதில் மிகவும் பொதுவான ஒன்று நன்கொடை வழங்குவது ஆகும். இது தன்னார்வமாக ஒருவர் தனது சொந்த பொருட்களை அல்லது பணத்தை தானம் செய்வதாக கருதப்படுகிறது. அதே சமயத்தில், வீட்டு தானம் நடுத்தர தானமாக கருதப்படுகிறது. இந்த தானம் மிகவும் பலனுள்ளதாக கருதப்படுகிறது. பசுவிற்கோ, நோயுற்றவர்களுக்கோ தானம் செய்வதை நீங்கள் தடுத்து நிறுத்தினால் அது மிகவும் அபசகுனமாக கருதப்படுகிறது. இதனால் நீங்கள் நிறைய இடங்களில் துன்பப்பட நேரிட வாய்ப்புள்ளது. ஒருவர் தனது கைகளால் எள், குஷ்பம், நீர் மற்றும் அரிசி ஆகியவற்றை தானம் செய்தால் அது மிகவும் புண்ணியமாகும்.

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான தகவல் என்னவென்றால், நீங்கள் தானம் செய்யும்போது ​​​​எப்போதும் உங்கள் தலையை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். தானத்தை வாங்குபவர் வடக்கு நோக்கி முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தானம் செய்பவரின் அதிர்ஷ்டம் அதிகரிக்கிறது.  அதே சமயம் அவருக்கு நிறைய நல்ல விஷயங்கள் வாழ்வில் நடக்கும்.  நீங்கள் ஒரு பெரிய விஷயத்தை தானமாக கொடுக்க விரும்பினால், பசு, பொன், வெள்ளி, ரத்தினம், எள், பெண், யானை, குதிரை, படுக்கை, உடை, நிலம், உணவு, பால், குடை போன்ற பொருட்களை தானமாக வழங்கலாம்.

(பொறுப்பு துறப்பு : இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Isha Mahashivratri : ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை ஒளிபரப்பு! எங்கு எப்படி பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News