5 ராசிகள் மீது ராகு, கேதுவின் அருள் மழை: இவர்களுக்கு நல்ல காலம் ஆரம்பம்

Blessings of Rahu Ketu: ஜோதிட கணக்கீடுகளின் படி 600 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விசேஷ யோகம் உருவாக உள்ளது. இந்த நேரத்தில் ராகுவும் கேதுவும் ஐந்து ராசிகள் மீது தங்கள் அருள் மழையை பொழிய உள்ளார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 29, 2024, 05:17 PM IST
  • கும்ப ராசிக்காரர்கள் மீது ராகுவும் கேதுவும் அருள் மழை பொழிவார்கள்.
  • பலவிதமான வெற்றிகள் கிடைக்கும்.
  • பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.
5 ராசிகள் மீது ராகு, கேதுவின் அருள் மழை: இவர்களுக்கு நல்ல காலம் ஆரம்பம் title=

Blessings of Rahu Ketu: ஜோதிட சாஸ்திரத்தின் படி, இன்னும் சில நாட்களில் சில முக்கிய ஜோதிட மாற்றங்கள் நிகழவுள்ளன. ராகுவும் கேதுவும் 600 ஆண்டுகளுக்குப் பிறகு சில ராசிகளின் மீது அருளை பொழிய உள்ளார்கள். இந்த கிரகங்கள் நிழல் கிரகங்களாக பார்க்கப்படுகின்றன. இவர்கள் ஒருவரது ஜாதகத்தில் அனுகூலமான நிலையில் இல்லை என்றால் அந்த நபர் பலவித கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. அவர் வாழ்க்கையில் ஏற்ற இறக்குங்கள் அதிகமாகும். 

ராகு (Rahu) கேதுவின் கோபப் பார்வை ஒருவர் மீது பட்டால் அவர் அரசனாக இருந்தாலும் ஆண்டியாக வேண்டிய நிலை ஏற்படலாம். இவர்களது அருள் பார்வை பட்டால் ஆண்டியாக இருப்பவரும் உயர் பதவி பெற்று பல செல்வங்களை அனுபவித்து மகிழ்ச்சி மழையில் நனைவார்.

ஜோதிட கணக்கீடுகளின் படி 600 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விசேஷ யோகம் உருவாக உள்ளது. இந்த நேரத்தில் ராகுவும் கேதுவும் (Ketu) ஐந்து ராசிகள் மீது தங்கள் அருள் மழையை பொழிய உள்ளார்கள். இந்த ராசிகள் மீது ராகு கேதுவின் தனிச்சிறப்பான அருட்பார்வை இருக்கும். இவர்கள் மீது தங்கள் அருளையும் காருண்யாத்தையும் பொழிய இருவரும் தயாராக உள்ளார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் காலம் மிகவும் நல்ல காலமாக இருக்கும். தடைபட்டிருக்கும் அனைத்து பணிகளும் இப்போது நடந்து முடியும். கேதுவின் அருளால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். நிதி நிலை வலுவாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். இதனால் வெற்றி கிடைக்கும். அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் காலம் பொற்காலமாக மாற உள்ளது. பல விஷயங்களில் உங்களுக்கு மேன்மையான நிலை கிடைக்கும். உங்கள் கோபத்தை அடக்கி கொண்டால் பல வெற்றிகளை காணலாம். இல்லையென்றால் உறவினர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படலாம். அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மேலும் படிக்க | உதயமாகிறார் சனி: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர குபேர யோகம், பண மழை கொட்டும்

துலாம் (Libra)

கேதுவின் சிறப்பு பார்வை துலா ராசிக்காரர்கள் மீது உள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் நாட்கள் மிகவும் சுகமானதாக இருக்கும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் துலா ராசிக்காரர்களுக்கு இந்த காலம் லாபகரமானதாக இருக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். தடைபட்டிருந்த அனைத்து பணிகளும் இப்பொழுது நடந்து முடியும். நீங்கள் நினைத்த காரியம் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்களின் பண வரவில் வரும் காலத்தில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ராகுவும் கேதுவும் இவர்கள் மீது அருள் பழிவார்கள். உங்களை வாட்டி வதைத்த பிரச்சினைகளும் இப்பொழுது தீரும். உங்கள் வாழ்க்கை துணையுடன் உங்கள் உறவும் மேம்படும். பணியிடத்தில் ஏற்றம் இருக்கும்.

கும்பம் (Aquarius)

கும்ப ராசிக்காரர்கள் மீது ராகுவும் கேதுவும் அருள் மழை பொழிவார்கள். பலவிதமான வெற்றிகள் கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும் . அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | மார்ச் மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு அற்புதங்கள் நிகழும், கனவு நிஜமாகும், லாபம் பெருகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News