இரு கிரகங்களின் மிகப்பெரிய ராசி மாற்றம்: இந்த ராசிகளுக்கு அடித்தது யோகம்

Planet Transit: செவ்வாய் மற்றும் புதனின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 7, 2022, 06:55 PM IST
  • செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், ரிஷப ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்.
  • அயல்நாட்டு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • இந்த காலத்தில் இவர்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும்.
இரு கிரகங்களின் மிகப்பெரிய ராசி மாற்றம்: இந்த ராசிகளுக்கு அடித்தது யோகம் title=

கிரகங்களின் ராசி மாற்றம், நவம்பர் 2022: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் மற்றும் இயக்க மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. நவம்பர் 13, 2022 அன்று, இரண்டு பெரிய கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றப் போகின்றன. ஜோதிடத்தின் கணக்கீடுகளின்படி, நவம்பர் 13, 2022 அன்று, செவ்வாய் ரிஷப ராசியிலும், புதன் விருச்சிக ராசியிலும் நுழைவார்கள். செவ்வாய் மற்றும் புதனின் இந்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிகளுக்கு செவ்வாய் மற்றும் புதனின் ராசி மாற்றத்தால் அபரிமிதமான நன்மைகள் ஏற்படும். 

ரிஷபம்: 

செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், ரிஷப ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். அயல்நாட்டு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் இவர்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். இதனுடன், அவர்கள் பல புதிய லாபங்களையும் பெறுவார்கள். 

விருச்சிகம்:

ஜோதிட சாஸ்திரத்தின் படி, விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் ஆறாம் வீட்டிற்கும் புதன் எட்டாம் வீட்டிற்கும் அதிபதிகளாக உள்ளனர். இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தால், தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் அதிகப்படியான பண வரவுக்கான வாய்ப்புகள் உள்ளன. கூட்டுத் தொழில் செய்யும் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இந்த நேரம் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | தீபாவளி முதல் இந்த ராசிகளுக்கு லட்சுமியின் அருளால் பண மழை பொழியும்

தனுசு: 

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தனுசு ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும். தனுசு ராசிக்கு ஏழாவது மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக புதன் இருப்பதால் இந்த சஞ்சாரம் அவர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

மகரம்: 

புதன் கிரகத்தின் சஞ்சாரம் மகர ராசியில் உள்ள மாணவர்களுக்கு சாதகமாக அமையும். தேர்வில் நல்ல முடிவுகளைப் பெறலாம். சில ஆராய்ச்சிப் பணிகளுடன் தொடர்புடையவர்கள் இப்போது வெற்றி பெறுவார்கள். செவ்வாயின் ராசி மாற்றம் அவர்களுக்கு சாதகமாக அமையும்.

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு 5 மற்றும் 8ஆம் வீடுகளுக்கு அதிபதி புதன். ஆகையால், புதன் கிரகத்தின் பெயர்ச்சியால், உங்கள் அலுவலக பணியில் பல வித வெற்றிகளை காண வாய்ப்புள்ளது. வீட்டின் சூழல் அமைதியாகவும் இனிமையாகவும் இருக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் கடின உழைப்புக்கு சிறப்பான பலன் கிடைக்கும். அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் பெருமை வந்து சேரும்.

மேலும் படிக்க | Astro Tips: இந்த ‘5’ ராசிகள் முத்து நகைகளிடம் இருந்து விலகி இருக்கவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News