ஜூலையில் சனி, சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிகளின் வாழ்வில் பம்பர் முன்னேற்றம்

Shani / Shukra Peyarchi: 24 மணி நேரத்திற்குள் சனியும் சுக்கிரனும் ராசி மாறுவது பெரிய மாற்றத்தை கொண்டு வரும். இந்த மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளித்தரும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 8, 2022, 11:05 AM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் வலுவான பண பலன்களைத் தரும்.
  • ஜூலை 13 ஆம் தேதி மிதுன ராசியில் சுக்கிரனின் பிரவேசம் துலாம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரும் முன்னேற்றத்தைத் தரும்.
  • சுக்கிரனின் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு பண பலன்களுடன் மிகுந்த மகிழ்ச்சியையும் தரும்.
ஜூலையில் சனி, சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிகளின் வாழ்வில் பம்பர் முன்னேற்றம் title=

சனி கோச்சாரம் / சுக்கிரன் கோச்சாரம் 2022: சனி மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சி வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜூலை 12 மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில் சனிப்பெயர்ச்சியும், சுக்கிரன் பெயர்ச்சியும் நடக்க உள்ளன. 24 மணி நேரத்திற்குள் சனியும் சுக்கிரனும் ராசி மாறுவது பெரிய மாற்றத்தை கொண்டு வரும். சனி வக்ர போக்கில் இருப்பதால் தலைகீழ் இயக்கத்தில் ராசி மாறுவார்.

ஜூலை 12 ஆம் தேதி, பிற்போக்கு நகர்வில் சனி கும்பத்தை விட்டு வெளியேறி மகர ராசியில் நுழைகிறார். ஜூலை 13 ஆம் தேதி சுக்கிரன் மிதுனத்தில் நுழைகிறார். இந்த மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளித்தரும்.

இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் நல்ல பலன்களை அளிக்கும்

மிதுன ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சுக்கிரன் 2022 ஆகஸ்ட் 7 வரை மிதுன ராசியில் இருப்பார். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்களுக்கு மிக நல்ல பலன்கள் கிடைக்கும். 

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் வலுவான பண பலன்களைத் தரும். பணம் சம்பாதிக்க பல வித வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்கள் ஏற்படக்கூடும். இவற்றால் பல அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களின் லாபம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 
 

துலாம்: 

துலா ராசியின் அதிபதி சுக்கிரன். ஜூலை 13 ஆம் தேதி மிதுன ராசியில் சுக்கிரனின் பிரவேசம் துலாம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரும் முன்னேற்றத்தைத் தரும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வருமானத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்படலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 

கும்பம்: 

சுக்கிரனின் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு பண பலன்களுடன் மிகுந்த மகிழ்ச்சியையும் தரும். வருமானம் அதிகரிக்கும். முதலீடு மூலம் லாபம் பெறுவீர்கள். வியாபாரம் பெருகும். எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். படைப்பாற்றல் உச்சத்தில் இருக்கும். மொத்தத்தில், இந்த நேரம் உங்களுக்கு ஒரு வரமாக இருக்கும்.

சனிப்பெயர்ச்சி இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச் செய்யும்

பிற்போக்கு நிலையில் சனி மகரத்தில் நுழைவது கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். இந்த இரண்டு ராசிகளிலும் சனியின் தாக்கம் நீங்கும். அதனால் அவர்கள் தங்கள் வேலைகளில் வெற்றி பெறத் தொடங்குவார்கள். திடீரென்று எதிர்பாராத இடங்க்களில் இருந்து பணம் வரும். இந்த காலத்தில் பெரிய சாதனைகளை செய்து முடிப்பீர்கள். மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News