செப்டம்பர் மாத ராசி பலன்: இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் நிச்சயம்

Monthly Horoscope September 2022: செப்டம்பர் மாதத்தில் சில கிரகங்கள் அதன் ராசியை மாற்றுகிறது. இத்தகைய சூழ்நிலையில், பல ராசிக்காரர்களின் வாழ்க்கை சுபமாகவும், அசுபமாகவும் இருக்கும். எனவே செப்டம்பர் மாதம் எந்த ராசிக்கு சாதகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 30, 2022, 03:36 PM IST
  • மாத ராசிபலன் செப்டம்பர் 2022
  • சிக்கலை சந்திக்க போகும் ராசிகள்
  • செப்டம்பர் மாதம் எந்த ராசிக்கு சாதகமாக இருக்கும்
செப்டம்பர் மாத ராசி பலன்: இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் நிச்சயம் title=

செப்டம்பர் மாத ராசிபலன் 2022: இன்னும் 48 மணி நேரத்தில் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த செப்டம்பர் மாதம் நம்மில் சிலருக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும், மேலும் செப்டம்பர் மாதம் சிலருக்கு அதிர்ஷ்டக் காலமாக அமையும். அதேபோல் செப்டம்பர் மாதத்தில் சில கிரகங்களின் ராசியிலும் மாற்றம் ஏற்பட உள்ளது, அதில் புதன் கன்னியில் வக்ர பெயர்ச்சி, சுக்கிரன் சிம்மத்தில் அஸ்தமனம், சூரியன் அதன் சொந்த ராசியான சிம்ம ராசியை விட்டு வெளியேறி கன்னி ராசியில் பிரவேசிக்க உள்ளனர். மேலும் மாத இறுதியில் சுக்கிரன் தனது பலவீனமான கன்னி ராசியில் சஞ்சரிப்பார். இதுபோன்ற சூழ்நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான ராசிபலனை இங்கே விரிவாக தெரிந்து கொள்வோம்.

மேஷம்: இந்த செப்டம்பர் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரும். நிதி நிலை சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும், கடந்த காலங்களில் தடைபட்ட பல வேலைகள் சுமூகமாக நிறைவேறும். அரசு வேலையில் தொடர்புடையவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடையவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளால் ஆதாயம் பெறுவார்கள். வணிக வர்க்கம் பணப் பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் கோபம் அதிகரிக்கும். உடல்நிலையில் பிரச்சனைகள் ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் டென்ஷன் இருக்கும்.

மேலும் படிக்க | சிம்மத்தின் இணையும் சூரியன் - சுக்கிரன்; இந்த ‘4’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்! 

ரிஷபம்: இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும், லாபம் கிடைக்கும். பணியிடத்தில் இருந்து வந்த பதற்றம் நீங்கும். பொருளாதாரத் திட்டத்தில் மூலதனத்தை முதலீடு செய்வீர்கள். தொழில் விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கோபம் அதிகமாக வரலாம், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். கலை மற்றும் படைப்புத் துறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு இது சாதகமாக நேரம், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழல் இருக்கும். திருமண வாழ்க்கையில் டென்ஷன் ஏற்படலாம், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மிதுனம்: செப்டம்பர் மாதம் உங்களுக்கு சாதகமான நேரத்தைக் கொண்டு வரும். பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். அரசு வேலையில் தொடர்புடையவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும், லாபம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். நிலம், வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

கடகம்: இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். பண நிலைமை சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அரசாங்க வேலையில் தொடர்புடையவர்கள் பதவி உயர்வு ஏற்படும். பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் தொடர்புடையவர்களுக்கு நேரம் சிறப்பாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சிம்மம்: இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உடல்நலக் கோளாறுகள் நீங்கும். பணியிடத்தில் தடைபட்ட பணிகள் அனைத்தும் சுமூகமாக நடைபெற்று மரியாதை கூடும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு நேரம் சாதகமாக உள்ளது, கௌரவ பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். மாணவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கன்னி: இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம், பண வரவு, லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் ஆதிக்கம் நிலைத்திருக்கும். மூதாதையர் சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்படலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். நீங்கள் ஒரு மத ஸ்தலத்திற்கு யாத்திரை செல்லலாம். குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் உறவு மேம்படும், பரஸ்பர அன்பு அதிகரிக்கும். 

துலாம்: இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு இன்னல்களாக இருக்கும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். பணியிடத்தில் தடைகள் வரலாம். அதிக வேலைப்பளுவால் மன சோர்வை சந்திப்பீர்கள். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். நிதி முதலீடுகளில் கவனமாக இருக்கவும். தொழில் விவகாரங்கள் மந்தமாக நடக்கும், பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் தகராறு ஏற்படலாம், வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்: இந்த செப்டம்பர் மாதம் நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பண நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் கடந்த காலங்களில் தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் சுமுகமாக நடக்கும். சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அதிக கோபத்தால் குழப்பம் ஏற்படலாம், தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அரசு வேலையில் தொடர்புடையவர்களுக்கு பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். கோட் நீதிமன்றம் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஃபேஷன் துறை மற்றும் கலைத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு நேரம் சிறப்பாக இருக்கும், மரியாதை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படலாம்.

தனுசு: இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். லாப வாய்ப்புகள் உருவாகும். பணியிடம் தொடர்பான அனைத்து பணிகளும் முழுமையாக முடிவடையும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகள் சிறப்பான லாபத்தைப் பெறுவார்கள், புதிய பெரிய ஒப்பந்தம் கைகூடும். மாணவர்களுக்குச் சாதகமான நேரம், போட்டித் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். தாம்பத்திய வாழ்வில் நிலவி வரும் பதற்றம் நீங்கும், பரஸ்பர அன்பு அதிகரிக்கும்.

மகரம்: இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும் ஆனால் மன உளைச்சல் இருக்கலாம். உடலில் சோம்பல் தாக்கம் இருக்கும். ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். முதலீடு செய்வதில் கவனமாக இருங்கள். தொழில் விஷயங்களில் தடங்கல் ஏற்படலாம், பொறுமையாக செயல்படுங்கள். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம், கோபம் அதிகமாகி டென்ஷன் இருக்கும். மாணவர்களுக்கு நேரம் சாதாரணமானது, போட்டித் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும், உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கும்பம்: இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு கடினமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பது சவாலாக இருக்கும். நிதிநிலை சீராக இருக்கும். கடின உழைப்புக்குப் பிறகுதான் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் புத்திசாலித்தனமாக பணத்தை முதலீடு செய்யுங்கள். பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையில் தொடர்புடையவர்களுக்கு நல்ல நேரம். நிலம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். திருமண வாழ்க்கை இயல்பாக இருக்கும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மீனம்: இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நீங்கள் துறையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும், ஆனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலைமை வலுவாக இருக்கும், பண ஆதாயத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய ஒப்பந்தம் கைகூடும். லாப வாய்ப்புகள் உண்டாகும். நிலம், வீடு, வாகனம் போன்றவை கிடைக்க வாய்ப்பு உண்டு. சொத்து முதலீடு லாபகரமாக இருக்கும். உடல்நலக் கோளாறுகள் நீங்கும். மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும், பரஸ்பர புரிதலும் அன்பும் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | ஆகஸ்டில் கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு எக்கச்சக்க ஏற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News