Ketu Gochar 2023: கேது பெயர்ச்சியால் புத்தாண்டில் ஆனந்தத்தை அனுபவிக்கப்போகும் '4' ராசிகள்

2023 Ketu Transit Prediction: நிழல் கிரகங்களான கேதுவும் ராகுவும் பெயர்ச்சி அடையும் போது பலரின் வாழ்க்கையில் புயலடிக்கும் என்றால், சிலரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கூரையை பிளந்துக் கொண்டு கொட்டும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 17, 2022, 07:58 AM IST
  • கேது பெயர்ச்சியால் பலனடையப் போகும் ராசிகள்
  • கேது தோஷம் இல்லாத ராசிகள்
  • கேதுவின் நிலை சாதகமாக மாறினால் பிரபலமாகும் ராசி
Ketu Gochar 2023: கேது பெயர்ச்சியால் புத்தாண்டில் ஆனந்தத்தை அனுபவிக்கப்போகும் '4' ராசிகள் title=

Ketu Gochar 2023: ஜோதிட சாஸ்திரத்தில் ராகு மற்றும் கேது கோப கிரகங்களாகக் கருதப்படுகின்றன. நிழல் கிரகங்களான கேதுவும் ராகுவும் பெயர்ச்சி அடையும் போது பலரின் வாழ்க்கையில் புயலடிக்கும் என்றால், சிலரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கூரையை பிளந்துக் கொண்டு கொட்டும். பிறக்கவிருக்கும் புத்தாண்டில் பெயர்ச்சியாகும் கேது கிரகம் யாருக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்? தெரிந்துக் கொண்டால், நிம்மதியாக திட்டமிடலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி ராகு, கேது போன்ற கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் அசுப நிலையில் அமர்ந்தால், அவர் படிப்படியாக ஏழையாகி விடுகிறார்.

ஆனால், கிரகங்களின் ராசி மாற்றத்தால், பலரின் அதிர்ஷ்டமும், துரதிருஷ்டமும் மாறுகிறது. புத்தாண்டின் தொடக்கத்திலேயே பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. கன்னி ராசியில் சஞ்சரிக்கும் கேது, துலாம் ராசிக்கு பெயர்கிறார். கேது பகவான், ஒரு ராசியை விட்டுவிட்டு மற்றொரு ராசிக்குள் நுழைய 18 மாதங்கள் ஆகும். கேதுவின் சஞ்சாரத்தால் 4 ராசிகளின் அதிர்ஷ்டம் உயரப் போகிறது. அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம்.

மேலும் படிக்க | தவறுதலாக கூட சனிக்கிழமை இந்த 5 விஷயங்களை செய்ய வேண்டாம்

கேதுவின் அருளால் புத்தாண்டில் மகிழப்போகும் 4 ராசிகள் இவை...

சிம்மம்: தடைபட்ட வேலைகள் முடியும்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு சிறப்பாக அமையப் போகிறது. ​​இதுவரை தடைபட்ட பணிகள் தானாக முடிவடையும். இதனுடன், பணியிடத்தில் பல விரும்பிய முடிவுகளை அடைய முடியும். அடுத்த வருடம் உங்கள் வீட்டில் புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கலாம்.
 
மகரம்: குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்படும்
கேதுவின் தாக்கத்தால் வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். புதிய தொழிலைத் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு, இது உற்சாகமான, வெற்றிகரமான காலமாக இருக்கும். கடனாகக் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறலாம், குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்படும்.

மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் புதன்; புத்தாண்டில் வெற்றிகளை குவிக்க உள்ள ‘சில’ ராசிகள்!
 
தனுசு: வழக்குகள் சாதகமாகத் தீரும்
அடுத்த ஆண்டு சமூகத்தில் மதிப்பும் கெளரமும் வந்து சேர கேது பகவானின் சஞ்சாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு உதவும். பலரின் பாராட்டுகள் வந்து குவியும். வீட்டில் பல ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்க்கும் வாய்ப்பு கிடைக்கும். நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

ரிஷபம்: புதிய பகுதிகளில் முதலீடு செய்யலாம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு, கேது பெயர்ச்சி பொருளாதார ரீதியிலான முன்னேற்றத்தைக் கொடுக்கும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். புதிய துறையில் முதலீடு செய்வீர்கள், அதன் மூலம் நீங்கள் பயனடையலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில நல்ல செய்திகள் வந்து சேரும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | விருச்சிக ராசியில் புத - ஆதித்ய யோகம்; உச்சத்தை தொடப்போகும் ‘6’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News