ஆகஸ்ட் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி மழை பொழியும்: உங்க ராசி இதுவா?

Monthly Horoscope: மேஷம், மிதுனம் உள்ளிட்ட நான்கு ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதம் அதிக பலன் அடைவார்கள். ஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 27, 2022, 12:13 PM IST
  • மேஷ ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் தொழிலில் முன்னேற்றம் காணலாம்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மகிழ்ச்சியைத் தரும்.
  • பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
ஆகஸ்ட் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி மழை பொழியும்: உங்க ராசி இதுவா?  title=

ஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட ராசிகள்: கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலைப்படி ஆகஸ்ட் மாதம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு பல கிரகங்களின் ராசி மாற்றங்களால் பலன்கள் கிடைக்கும். ஜோதிடர்களின் கூற்றுப்படி ஆகஸ்ட் மாதத்தில் சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்படும். இந்த கிரகங்களின் நிலை மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் ஏற்படும். மேஷம், மிதுனம் உள்ளிட்ட நான்கு ராசிக்காரர்கள் இந்த கிரகங்களின் நிலை மாறுவதால் பலன் அடைவார்கள். ஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் தொழிலில் முன்னேற்றம் காணலாம். பல வழிகளிலிருந்து பண வரவு இருக்கும். இந்த காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி உண்டாகும். கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். கல்வித்துறையுடன் தொடர்புடையவர்கள் ஆதாயமடைவார்கள். உங்கள் அலுவலகத்தில் உங்கள் பனி பாராட்டப்படும். 

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, நிம்மதியான வாழ்வைத் தரும் பிரதோஷ வழிபாடு

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மகிழ்ச்சியைத் தரும். இந்த நேரத்தில் நீங்கள் பணத்தை ஈட்டுவதிலும் சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இது நல்ல நேரம். அலுவலக பணிகளில் இருப்பவர்களது கௌரவம் உயரும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் சில ரகசியப் பணம் கிடைக்கும். பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த சந்திப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்  தரும். உள்ளது. இந்த மாதம் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த பணிகள் இப்போது நடந்துமுடியும். பல காலமாக சிக்கியிருந்த பணம் இப்போது மீண்டும் கிடைக்கும். 

விருச்சிகம்:

ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணை / காதல் துணையின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். இது தவிர புதிய வேலைகளில் கவனம் செலுத்தி லாபம் ஈட்டுவீர்கள். சொந்த வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் அதிகப்படியான லாபம் காண்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | மூன்று ராசிகளுக்கு அடிக்குது ஜாக்பாட்! கவலை வேண்டாம் கன்னி ராசிக்காரரே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News