ஆடி மாத ராசிபலன்: 4 ராசிகளுக்கு அற்புதமான பலன்களைத் தரும் சுபகிருது ஆடி

Horoscope of Aadi Month: சந்திரனின் சொந்த வீட்டிற்கு விருந்தினராக சென்றிருக்கும் சூரிய பகவானின் அருளாசி ஆடி வெள்ளம் போல் மடை திறந்து பாயும் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 18, 2022, 06:58 AM IST
  • மேஷ ராசிக்காரர்கள் எச்சரிக்கயாக இருக்கவும்
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு பெரிய அளவிலான நிதிப் பலன்கள் கிடைக்கும்.
  • சிம்ம ராசிக்குக் காதல், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.
ஆடி மாத ராசிபலன்: 4 ராசிகளுக்கு அற்புதமான பலன்களைத் தரும் சுபகிருது ஆடி title=

ஆடி மாத ராசிபலன்: சுபகிருது ஆண்டின் ஆடி மாதம் சில ராசிகளுக்கு மிகவும் சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. ஆடி மாதம் பல பண்டிகைகளும் விழாக்களும் கோலாகலமாக கொண்டாடப்படும் மாதமாகும். இறைவழிபாட்டிற்கு உரிய மாதமாக கருதப்படுவதால், சுப காரியங்களை ஆடி மாதத்தில் தவிர்ப்பார்கள். நம் அன்றாட வாழ்க்கையில் நிகழும் பல மாற்றங்களுக்கு கிரக மாறுதல்கள் காரணம். சுபகிருது தமிழ் ஆண்டின் கிரக அமைப்புகள் எந்த ராசிகளுக்கு எதுபோன்ற பலன்களைக் கொடுக்கும்? இது 12 ராசிகளுக்கான ஆடி மாத ராசிபலன்...

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த ஆடி மாதம் அமோகமான பலன்கள் கிடைக்கும். முன்கூட்டியே திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. வெளியூர் பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கிரக நிலைகள் மாத இறுதியில் சிரமத்தை கொடுக்கும் என்பதால் புதிய முயற்சிகளை கைவிடுவது நல்லது.  

ரிஷபம்: ஆடி மாதம் முழுவதும் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும் வகையில், தடைகள் யாவும் விலகி நன்மைகள் நடக்கும். தொலைதூர பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், நிதானத்தை கைவிட வேண்டாம். 

மிதுனம்: மிதுன ராசிக்கு நிம்மதியைக் கொடுக்கும் மாதம் இது. சிக்கல்கள் மறையும். கணவன் மனைவி இடையிலான பிரச்சனைகளை பேசுவதை தவிர்ப்பது குடும்ப நிம்மதிக்கு நல்லது. அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்பட்டாலும், பெரிய அளவில் பலன் இருக்காது என்பதால், முடிந்த அளவு பயணத்தைத் தவிர்க்கவும்.  

மேலும் படிக்க | வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமா: சனீஸ்வரரின் பிறந்தநாளன்று செய்ய வேண்டிய தானங்கள் 

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த தொய்வு நிலை மாறி புதுப்பொலிவு தென்படும். உழைப்பு உங்களுடைய பெருமையை நிலைநாட்டும். கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைக்கும் நிலையில் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் நிதானம் தேவை. அவசரப்பட்டு முடிவெடுப்பதை தவிர்த்து, ஆலோசித்து முடிவெடுக்கவும்.  

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் முழுவதுமாக பல்வேறு நன்மைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்து பணி சுமையும் கூடினாலும் மதிப்பும் கெளரவமும் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும் மாதம் இது. இதுவரை நடக்காமல் தடைபட்டிருந்த காரியங்கள் சுலபமாக நடக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றங்கள் அற்புதமாக இருக்கும். ஆனால், அலட்சியம் பல இழப்புகளை ஏற்படுத்த கூடும் என்பதால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

துலாம்: துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு ஆடி மாதம் முழுவதும் உற்சாகத்தை கொடுக்கும். இலக்கை நோக்கி பயணிக்கும் உத்வேகத்தை வளர்த்துக் கொண்டு செயல்படவும். பணிபுரிபவர்கள் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  

விருச்சிகம்: விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்றம் ஏற்படும். உற்சாகமான மனநிலையுடன் செயல்படுவீர்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கதவைத் தடுக்கும். குடும்பத்தில், பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். புதிய தொழில் துவங்கும் எண்ணம் நிறைவேறலாம்.

மேலும் படிக்க | கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் யாருக்கெல்லாம் நன்மை தருவார்?

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு தடைகள் விலகி குடும்பத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.எந்த சூழலிலும் நேர்மையை கைவிட வேண்டாம்.

மகரம்: மகரத்தில் பிறந்தவர்களுக்கு ஆடி மாதம் அற்புதமான மாதமாக அமையும். ஆனால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.  

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறையும், உற்சாகத்திற்கு குறைவிருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மீனம்: மீனத்தில் பிறந்தவர்களுக்கு ஆடி மாதம் அற்புதமாக இருக்கும். சுப விரயங்கள் ஏர்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முயற்சியில் பன்மடங்கு லாபம் கிடைத்து, பொருளாதார ரீதியான வளர்ச்சி அதிகமாகும். பிள்ளைகளின் எதிர்காலம், கல்வி குறித்த விஷயத்தில் கூடுதல் அக்கறை தேவை.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நட்புக்காக உயிரையும் கொடுக்கும் ராசிகள் இவைதான்: உங்க நண்பருக்கு இந்த ராசியா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News