ஆகஸ்ட் 1 முதல் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்: மகிழ்ச்சி பொங்கும் செல்வம் பெருகும்

Lucky Zodiacs of August 2022: கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிகக்காரர்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நல்ல காலம் தொடங்கப் போகிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 30, 2022, 06:04 PM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு மாத தொடக்கத்தில் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.
  • ஆனால் அதீத ஆர்வத்தைத் தவிர்க்கவும்.
  • உங்கள் இயல்பைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆகஸ்ட் 1 முதல் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்: மகிழ்ச்சி பொங்கும் செல்வம் பெருகும் title=

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். ஜாதகம் கிரகங்களின் இயக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிகக்காரர்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நல்ல காலம் தொடங்கப் போகிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மிதுனம்

மிதுன ராசிக்கார்ரகளுக்கு மாத தொடக்கத்தில் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் அதீத ஆர்வத்தைத் தவிர்க்கவும். உங்கள் இயல்பைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்துடன் அன்பான உறவைப் பேணுங்கள். வேலை நேர்காணல் போன்றவற்றில் வெற்றி பெறுவீர்கள். நண்பரின் ஆதரவையும் பெறலாம். ஆகஸ்ட் 17க்குப் பிறகு வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் நிலைமைகள் திருப்திகரமாக இருக்கும்.

மேலும் படிக்க | ஆகஸ்ட் மாத ராசிபலன்: உங்க ராசிக்கு எப்படி இருக்கு? யாருக்கு ஆதாயம்? யாருக்கு ஆபத்து?

கடகம்

கடக ராசிக்காரர்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். ஆனால் பொறுமையாக இருங்கள். அலுவலகத்தில் இக்கட்டான சூழல் அமைந்தாலும் பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். தொழில் நிலை மேம்படும். லாப வாய்ப்புகள் அமையும். உத்தியோகம் மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. வேறு இடத்துக்குப் போக வேண்டி வரலாம். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஆகஸ்ட் 23க்கு பிறகு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான யோகங்களும் அமையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். சில அறியப்படாத பயத்தால் உங்களுக்கு தொந்தரவுகள் வரக்கூடும். மாத தொடக்கத்தில், ஒரு மத ஸ்தலத்திற்கு பயணம் செய்யும் திட்டம் உருவாகக்கூடும். பயணம் இனிமையாக இருக்கும். அக்டோபர் 5 முதல் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சீராகும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடும். பல வழிகளிலிருந்து பண வரவு கூடும். 

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் பொறுமையின்மை, பேச்சில் கடுமை போன்ற பாதிப்புகள் ஏற்படும். நம்பிக்கை மிகுதியாக இருக்கும். படிப்பதில் ஆர்வம் இருக்கும். உயர்கல்விக்காக குடும்பத்தை விட்டு வெளியே செல்லலாம். ஆகஸ்ட் 17 வரை பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆட்சி நிர்வாகத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். ஆகஸ்ட் 24க்குப் பிறகு வாகன யோகம் உண்டாகிறது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | குருவின் அருளால் அடுத்த 120 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News