ஆகஸ்ட் மாத ராசிபலன்: உங்க ராசிக்கு எப்படி இருக்கு? யாருக்கு ஆதாயம்? யாருக்கு ஆபத்து?

Monthly Horoscope: ஆகஸ்ட் மாதம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? ஆகஸ்ட் மாதம் பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரப்போகிறது. சிலருக்கோ பல சங்கடங்களும் காத்திருக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 29, 2022, 06:21 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
  • கடக ராசிக்காரர்களுக்கு, தொழில் மற்றும் வேலையில் ஆகஸ்ட் மாதம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
  • துலா ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும்.
ஆகஸ்ட் மாத ராசிபலன்: உங்க ராசிக்கு எப்படி இருக்கு? யாருக்கு ஆதாயம்? யாருக்கு ஆபத்து? title=

ஆகஸ்ட் மாத ராசிபலன்: ஆகஸ்ட் மாதம் பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரப்போகிறது. இந்த நேரத்தில் பலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். பல ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், வியாபாரிகள் விரும்பிய லாபத்தைப் பெறலாம். அதேசமயம் சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பல சங்கடங்களையும் தரும். இவர்கள் இந்த நேரத்தில் சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். ஆகஸ்ட் மாதம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். காதல் வாழ்க்கை மேம்படும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக முடங்கி இருந்த பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும். இந்த நேரத்தில் நீங்கள் பணியிடத்தில் ஒரு பெரிய பொறுப்பைப் பெறலாம். தந்தையின் உதவியால் பணம் கிடைக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு, தொழில் மற்றும் வேலையில் ஆகஸ்ட் மாதம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

மேலும் படிக்க | ஆகஸ்ட் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 

சிம்மம்:
சிம்மம் ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில், நீங்கள் வேலையில் உங்கள் இயல்பை மென்மையாக வைத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் விரும்பிய வெற்றியைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சாதகமாக இருக்கும். மாத தொடக்கத்தில், நீங்கள் சுப செலவுகளை செய்வீர்கள். இந்த நேரத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

துலாம்:
துலா ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். மாத தொடக்கத்தில், சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும், சிறிது நாள் கழித்து நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். புதிய நண்பர்கள் உங்களுடன் இணைவார்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சில பிரச்சனைகளை கொண்டு வரலாம். மாத தொடக்கத்தில், நீங்கள் பணி அழுத்தத்தை சந்திக்க நேரிடும். இந்த மாதம் நீங்கள் பல சவால்களையும் சந்திக்க நேரிடலாம். தொழில் தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெற்றியைப் பெறலாம். இந்த நேரத்தில் நீங்கள் தொழில் மற்றும் வேலை தொடர்பான நல்ல முடிவுகளைப் பெறலாம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் வரலாம்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் கலவையாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் தேவையற்ற செலவுகளால் சிரமப்படுவீர்கள். பொருளாதாரச் சவால்கள் இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மகர ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாத தொடக்கத்தில், நீங்கள் இரகசிய எதிரிகளைத் தவிர்க்க வேண்டும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முன்னேற்றம் தரும். இருப்பினும், மாதத்தின் நடுப்பகுதியில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நலம் விரும்பிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். இந்த மாதம் நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருமானம் கூடும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி; இந்த ராசிக்காரர்களின் தலைவிதி இன்று முதல் மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News