ஜூலை 2022 மாத ராசி பலன்: சிம்மம் முதல் விருச்சிகம் வரை

ஜூலை மாதம் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் ஏற்படும். எனினும் சில ராசிக்காரர்கள் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். தனுசு முதல் முதல் மீனம் வரை உள்ள ராசிகளின் பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 30, 2022, 08:02 PM IST
ஜூலை 2022 மாத ராசி பலன்: சிம்மம் முதல் விருச்சிகம் வரை title=

Monthly Horoscope for July  2022: ஜூலை மாத ராசிபலன் 2022: ஜூலை மாதம் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் ஏற்படும். எனினும் சில ராசிக்காரர்கள் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். சிம்மம் முதல் விருச்சிகம் வரை உள்ள ராசிகளின் பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மே 2022 மாத ராசி பலன்கள்:

சிம்மம்

இந்த மாதம் வாழ்க்கையை புதிய நோக்கத்துடன் பாருங்கள். உங்கள் மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தொடர்ந்து தேடும் ஒருவர் நீங்கள். நீங்கள் மீண்டு முன்னேற வேண்டும் என்ற வலுவான ஆசை இருக்கும். மேலும் அந்த இலக்குகளை அடைய கடினமாக உழைப்பீர்கள். உங்கள் ஆர்வத்தில் குறைவே இருக்காது. பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படலாம். அவை பலன் தரக் கூடியதாக இருக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வும் சந்தோஷமும் ஏற்படும். பொருளாதார நிலைமையும் மேம்படும்

கன்னி

இந்த மாதம் நீங்கள் கடின உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். பிரச்சனை அனைத்திலிருந்தும் விடுபடுவதற்கான வலுவான வாய்ப்புகளை உணரலாம். உங்கள் மனதை தெளிவுபடுத்துவது முன்பை விட எளியான வேலையாக இருக்கும். அர்த்தமில்லாமல்  விஷயங்களில், அதிக கவனம் செலுத்தி மனதை புண்படுத்திக் கொள்ள வேண்டாம். அதை முற்றிலும் புறக்கணியுங்கள். வளர்ச்சியில் சில தடைகள் ஏற்படக்கூடும் என்பதால் உங்கள் பொறுமை சோதிக்கப்படலாம். நீங்கள் வெற்றி பெற விரும்பினால், உங்களுக்கு முன்னால் உள்ள தடைகளை தகர்கவும், சவால்களை சந்திக்கவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | ஜூலை  2022 மாத ராசி பலன்: மேஷம் முதல் கடகம் வரை

துலாம்

இந்த மாதம் உங்கள் சொந்த முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு நல்ல செயலைச் செய்யும் போதும் அதனை செய்யலாமா வேண்டாமா என்ற  குழப்பத்தில் சிக்கிக்கொள்வது அடிக்கடி ஏற்படக் கூடும். மறுபுறம், சரியான முடிவை எடுப்பது சவாலாக இருக்கும். எல்லாவற்றிலிருந்தும் ஓட விரும்பும் மனப்பான்மை ஏற்படலாம். நிலைமையை பொறுமையாக கையாளவும். நீண்ட கால விடுமுறையை திட்டமிடுங்கள். உங்களுக்கு மன நீதியாகவும் உடல்க் ரீதியாகவும் புத்துணர்ச்சி தேவை

விருச்சிகம்

இந்த மாதம் உங்களுக்கு மகிழ்ச்சியாகரமான மாதமாக இருக்கும். உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்வீர்கள். எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, இப்போது  கவனம் செலுத்துங்கள். இந்த மாதம், உங்கள் காதல் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி கிடைக்கும், குடுமப்த்தி சந்தோஷம் நிலவும். இருப்பினும், இந்த அளவிலான செலவினங்களை கட்டுப்படுத்தவும். தவறினால், நீங்கள் கடனில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது. செலவைக் குறைப்பது விவேகமானதாக இருக்கலாம்.

மேலும் படிக்க | Astro Remedies: சகல தோஷங்களையும் நீக்கும் சோமவார விரதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News