புத்தாண்டின் முதல் நாளில் ‘இதை’ செய்யுங்கள்..வீட்டில் அதிர்ஷ்ட மழை கொட்டும்..!

அடுத்த வாரம் புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்த புத்தாண்டின் முதல் நாளில் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. 

Written by - Yuvashree | Last Updated : Dec 29, 2023, 05:47 PM IST
  • புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்க போகிறது.
  • இந்த ஆண்டின் முதல் நாளில் செய்ய வேண்டிய விஷயங்கள்.
  • இதை செய்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்.
புத்தாண்டின் முதல் நாளில் ‘இதை’ செய்யுங்கள்..வீட்டில் அதிர்ஷ்ட மழை கொட்டும்..! title=

புத்தாண்டு என்றாலே புதிய தொடக்கம் என்றும் புதிய பயணங்களுக்கான ஆரம்பம் என்றும் அர்த்தம். இந்த நாளில், பலரும் தலைக்கு குளித்து, கோயிலுக்கு சென்று கடவுளை வழிப்படுவதை வழக்கமாக கொண்டிருப்பர். ஒரு சிலர், குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ வெளியூர்களுக்கு பயணம் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பர். அந்த வகையில், இந்த புது வருடத்தின் போது சில செயல்களை செய்தால் வீட்டில் அதிர்ஷ்டம் கொட்டுமாம்.

2024ஆம் ஆண்டில் கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள்:

>புத்தாண்டின் முதல் நாளில், காலையில் எழுந்து குளித்து விநாயக பெருமாளை வழிபட வேண்டும். 

>சிவ பெருமான், தடைகளை தகர்க்கும் கடவுளாக பார்க்கப்படுகிறார். அதனால், வருடத்தின் முதல் நாளில் சிவனை வழிப்படுவதால் அந்த வருடத்தில் எந்த தடைகளும் ஏற்படாமல் தடுக்கலாம். 

>விஷ்ணு பகவான், காக்கும் கடவுளாக பக்தர்களால் பார்க்கப்படுகிறார். இவரை, வருடத்தின் முதல் நாளில் பிரதிஷ்டை செய்து வழிபடலாம். 

>வீட்டில் அதிர்ஷ்டம் கொட்ட, லக்‌ஷ்மி தேவியை வழிப்படுவது அவசியம். அதனால், புத்தாண்டின் முதல் நாளில் லக்‌ஷ்மி தேவியை வழிபடலாம். 

>இந்த ஆண்டின் முதல் நாளில் புது பொருட்களையும் வாங்கலாம். வீட்டில் செப்பு சிலைகள் வாங்கி வைப்பதால், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் மேம்படும். 

>இந்த ஆண்டின் முதல் நாள் மட்டுமன்றி, எப்போது முடிந்தாலும் யாருக்காவது அன்னதானம் செய்வது சிறந்தது. 

மேலும் படிக்க | 2024ல் சனி ஆட்டம் ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

இந்த ஆண்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்:

2024ஆம் ஆண்டின் முதல் நாள், திங்கட்கிழமை அன்று வருகிறது. இந்த நாள் மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. திங்கட்கிழமையில் இந்த ஆண்டு தொடங்குவதால் இந்த ஆனே மிகவும் செழிப்பானதாக இருக்கும் என கருதப்படுகிறது. 

மங்கள யோகம்:

2024ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதியில் சூரியனும் செவ்வாயும் தனுசு ராசியில் சஞ்சரிக்கும். இந்த கிரகங்கள் இணைவதால் ஆதித்ய மங்களம் உருவாகுமாம். இதனால், பலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கலாம். சிலர், தனிப்பட்ட வாழ்கையில் பல உயரங்களை தொடுவர். 

லக்‌ஷ்மி நாராயண யோகம்:

புத்தாண்டில் வரும் யோகங்களுள் ஒன்று, லக்‌ஷ்மி நாராயணன் யோகம். இதனால், சுக்கிரன் மற்றும் புதன் கிரகங்கல் இணைவதால் விஷ்ணு பகவானை வழிபடுவது பயனளிக்கும். இதனால், விஷ்ணுவை வழிபடும் நபர் பொருளாதார வகையில் முன்னேறுவார் என கூறப்படுகிறது. மேலும், திருமணம் ஆனவர்களின் தாம்பத்ய வாழ்க்கையும் சிறக்கும் என நம்பப்படுகிறது. 

மேலும் படிக்க | 10 ஆண்டுக்குப் பிறகு உருவாகும் அபூர்வ யோகம், இந்த ராசிகளுக்கு 2024ல் ராஜயோகம்

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News