ராம நவமியும் சர்வார்த்தசித்தி யோகமும்! ‘இந்த’ ராசிகளின் எண்ணம் அனைத்தும் நிறைவேறும்!

பகவான் ராமரின் அருளைப் பெற விரும்புபவர்கள், அவரை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் ராம நவமி. ராம நவமி அன்றுதான் ராமர் பூமியில் அவதரித்ததாக ஆன்மீக நம்பிக்கைகள் கூறுகின்றன. பங்குனி மாதத்தின் சுக்ல பக்ஷ நவமி அன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 27, 2023, 09:59 AM IST
  • திருமணம் ஆகாதவர்களுக்கு உறவுகள் கை கூடி வரலாம்.
  • பொருளாதார நிலையும் முன்பை விட வலுவாக இருக்கும்.
  • சமூகத்தில் புகழ் உயரத்தை தொடும்.
ராம நவமியும் சர்வார்த்தசித்தி யோகமும்! ‘இந்த’ ராசிகளின் எண்ணம் அனைத்தும் நிறைவேறும்! title=

இந்து மதத்தில் பல கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. அவற்றுடன் தொடர்புடைய கொண்டாட்டங்களும், திருவிழாக்களும் ஆண்டு முழுவதும் நமக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றன . அந்த வகையில் பகவான் ராமரின் அருளைப் பெற விரும்புபவர்கள், அவரை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் ராம நவமி. ராம நவமி அன்றுதான் ராமர் பூமியில் அவதரித்ததாக ஆன்மீக நம்பிக்கைகள் கூறுகின்றன. பங்குனி மாதத்தின் சுக்ல பக்ஷ நவமி அன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ராம நவமி 30 மார்ச் 2023 அன்று கொண்டாடப்படும்.

ராம நவமி நாளில் மிகவும் மங்களகரமான மற்றும் அபூர்வ யோகம் உருவாகிறது, இதன் காரணமாக 3 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அந்த ராசிக்காரர்களைப் பற்றிச் சொல்வோம்.

உருவாகும் யோகங்கள்

பண்டிதர்களின் கூற்றுப்படி, அமிர்த சித்தி யோகம், குரு புஷ்ய யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் ஆகியவை ராம நவமியில் உருவாகின்றன. இந்த யோகங்கள் மூன்று ராசிகளுக்கு மிகவும் பலன்களை அள்ளிக் கொடுக்கும். குறிப்பிடத்தக்க வகையில், அமிர்த சித்தி யோகம், சர்வார்த்தசித்தி யோகம் மார்ச் 30 ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 10.59 மணி வரை இருக்கும். இப்போது அந்த மூன்று ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகவும் சாதகமாக இருக்கும். ராமர் அருளால் வெற்றி பெறுவார். கடனில் இருந்தும் விடுதலை பெறுவீர்கள். பல வருமான ஆதாரங்கள் உருவாகும், வியாபாரம் மற்றும் வேலையிலும் லாபம் இருக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.

மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியில் இருந்து தப்பிக்க... வீட்டில் வன்னி மரச்செடியை நடவும்!

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு ராம நவமி மிகவும் பலன் தரும். இந்த நாளில் நீங்கள் நல்ல செய்திகளைப் பெறலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு உறவுகள் கை கூடி வரலாம். இது தவிர, பொருளாதார நிலையும் முன்பை விட வலுவாக இருக்கும். உங்கள் புகழ் சமூகத்தில் உயரத்தை தொடும். உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும். 

ரிஷபம்

ராம நவமி நாள் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவைத் திறக்கும். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்கலாம். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், அதையும் இந்த நாளில் செய்யலாம். நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகளும் தொடங்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறூப்பேற்காது.)

மேலும் படிக்க | மேஷத்தில் நுழையும் புதன்! சவால்களை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News