கும்பத்தில் ஒன்றான சூரியன் - சனி.. 12 ராசிக்கான சுருக்கமான பலன்கள்

Shani Surya Yuti in Aquarius : பிப்ரவரி 13 ஆம் தேதி அதாவது செவ்வாய்கிழமை மாலை 3.54 மணிக்கு சனியின் ராசியான கும்பத்தில் சூரியன் பெயர்ச்சி அடைந்துள்ளார். வரும் மார்ச் 15ம் தேதி சூரியன் மீன ராசிக்கு மாறுவார். எனவே கும்ப ராசியில் சூரியன் சனியின் சேர்க்கையால் 12 ராசிகளுக்கு என்ன பலன் என்பதை  தெரிந்து கொள்வோம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 14, 2024, 02:48 PM IST
  • வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
  • முடிந்தவரை வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
  • பண தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பத்தில் ஒன்றான சூரியன் - சனி.. 12 ராசிக்கான சுருக்கமான பலன்கள் title=

ஜோதிடத்தின் படி, கிரங்களின் பெயர்ச்சி, அஸ்தமனம், உதயம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. அதன்படி கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன் நேற்று சனியின் ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். பொதுவாக ஜோதிடத்தில் நவகிரகங்களுக்கிடையேயான உறவு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதில் சூரியன் தந்தை என்றும், மகன் சனி என்றும் கூறப்படுகிறது. இந்த இரு கிரகங்களும் எதிரி கிரகங்களாக உள்ளன. அதாவது சனி பகவான் பிறந்ததும் அவரை சூரியன் ஒதுக்கியதாகப் புராண கதைகள் கூறுகின்றன. அதன்படி சூரியன் மற்றும் சனி இருவரும் எதிர் எதிர் கிரகங்கள் என்பதால் அவர்கள் இணைந்துள்ளதால், தந்தை - மகன் இடையேயான உறவில் பிரச்னை ஏற்படும். இந்நிலையில் தற்போது சூரியன் மற்றும் சனி கிரகங்கள் சேர்க்கை 12 ராசிக்கும் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். சகோதரர் மற்றும் நண்பர்களின் உதவியைப் பெறலாம். சொந்த தொழில் தொடங்க இதுவே சாதகமான நேரம். எண்ணெய், இரும்பு, சுரங்கம் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் கௌரவம் உயரும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட வேலைகள் இப்போது நிறைவேறும். வீடு, வாகனம் வாங்க வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்: அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சூரியன் மற்றும் சனியால், மதப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க | இந்த ராசிகளின் தலைவிதி மாறும்: சுக்கிரன் அருளால் வாழ்க்கை ஜொலிக்கும்

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் சூரியன் சேர்க்கையால் கஷ்ட காலம் ஆரம்பிக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வியாபாரம் செய்பவர்களுக்கு பண கஷ்டம் ஏற்படலாம். 

சிம்மம்: சனி மற்றும் சூரியன் சேர்க்கையால் சிம்ம ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை சலசலப்பாக இருக்கும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம். 

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் நல்ல இடத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கலாம். எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அரசாங்கம் தரப்பில் இருந்து வேலை வாய்ப்பை பெறலாம்.

துலாம்: ஷேர் மார்க்கெட்டில் மூதலீடு செய்யும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண இழப்பீடு ஏற்படலாம். உடன் பிறந்த சகோதரர்களுடன் வீண் சண்டைகள் வரலாம். 

விருச்சிகம்: மன உளைச்சல் ஏற்படலாம். மனம் கலங்கலாம். பணியிடத்தில் மூத்த ஊழியர்களின் ஆதரவைப் பெறலாம். தாயின் உடல்நிலை மோசமடையலாம். பண தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு: இந்த நேரத்தில் உங்களின் தைரியம் மற்றும் கௌரவம் உயரும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறுவீர்கள். நிதி நிலை மேம்படும். முக்கிய பொறுப்புகளை பெறலாம். மதப் பயணத்தின் மூலம் நிம்மதி அடைவீர்கள். குடுபத்தில் பண உதவி கிடைக்கும்.

மகரம்: அலுவலகத்தில் புகழ் பெறுவீர்கள். முதலீட்டால் செல்வம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி சூழல் நிலவும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. 

கும்பம்: புதிய தொழிலை தொடங்க சாதகமான நேரம். ஆரோக்கியத்தில் கவனம் கொல்ல வேண்டும். திருமண வாழ்க்கையில் சலசலப்பு ஏற்படலாம். முடிந்தவரை வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கும்பத்தில் சூரியனின் உச்ச பெயர்ச்சி, அடுத்த 30 நாட்கள் இந்த ராசிகளுக்கு சுபிட்சம், பண வரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News