கோபத்தை ஒதுக்கினால் செல்லுமிடமெல்லாம் சிறப்பு! விருச்சிக ராசியின் ஏப்ரல் மாத பலன்

Scorpio Horoscope 2023 April: ஒவ்வொரு மாதத்திற்குமான ராசிபலன்களை கணித்து அந்த மாதம் எப்படி என்று கணித்துக் கொண்டால், மனதளவில் தயாராகிவிடலாம். இது ஏப்ரல் மாதத்தில் விருச்சிக ராசியினருக்கான பலன்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 29, 2023, 05:26 PM IST
  • விருச்சிக ராசியினருக்கான ஏப்ரல் மாத ராசிபலன்கள்
  • தொட்டதெல்லாம் துலங்கும்
  • கோபத்தை கொஞ்சம் ஒதுக்கி வைத்தால் செல்லுமிடமெல்லாம் சிறப்பு
கோபத்தை ஒதுக்கினால் செல்லுமிடமெல்லாம் சிறப்பு! விருச்சிக ராசியின் ஏப்ரல் மாத பலன் title=

Monthly Horoscope: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றுகிறது. அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதேபோல, ஒவ்வொரு மாதத்திற்குமான ராசிபலன்களை கணித்து அந்த மாதம் எப்படி என்று கணிப்பு வெளியிடுவதும் வழக்கமாகிவிட்டது. ஏப்ரல் மாத ராசிபலன்களில் விருச்சிகம் ராசிக்கு ஜோதிடம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்துக் கொள்வோம்.

2023 ஏப்ரல் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களின் பணி நிர்வாகம் மிகவும் சிறப்பாக இருக்கும் மற்றும் அனைத்து வேலைகளும் சரியான நேரத்தில் சாதகமாக முடிவடையும். பணியிடத்தில் சக பெண் ஊழியர்களுடன் எந்தவிதமான தகராறும் வேண்டாம்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைப் பழக்கப்படுத்துவதுடன் உங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அரசு வேலையில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் பழக வேண்டாம், இல்லையெனில் அதிகாரிகளுடன் மனக்கசப்பு ஏற்படலாம்.

மேலும் படிக்க | எண் ‘8’ மற்றும் ‘ஏழரை’ சனீஸ்வரருக்கும் உள்ள தொடர்பு! எட்டுக்கு அருள்புரிவார் சனி

விருச்சிக ராசியை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு மாதத்தின் முதல் வாரத்தின் கடைசி நாட்களில் பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். கணிசமான வருமானம் பெறலாம். கோபத்தை கட்டுப்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும். அதிலும் வேலையில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில்லறை வணிகர்கள் முடிவுகளை எடுக்கும்போது அதிக லாபம் வேண்டும் என்று நினைக்காமல் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியால் உதவி கிடைக்கும். விளையாட்டு தொடர்பான போட்டிக்கு தயாராகி வரும் விருச்சிக ராசியினருக்கு ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் பொன்னான வாய்ப்பு கிடைக்கும். ஒரு நேரத்தில் ஒரு பணியில் கவனம் செலுத்துங்கள். மனது கஷ்டமாக இருக்கும் போது அனுமாரின் பாதம் பணியுங்கள், அவரை தியானிப்பது நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | சுக்கிரன் புதன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த ராசிகளுக்கு பம்பர் பண வரவு!!

தேவையில்லாத விஷயங்களில் சிக்கிக் கொள்வது சரியல்ல, குடும்பத்தில் அன்புடன் இருங்கள். வீட்டில் உள்ள ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவரைக் கவனித்துக் கொள்ள நேரம் ஒதுக்குங்கள்.

சருமத்தை கவனித்துக் கொள்ள வேண்டும், மாதத்தின் முதல் வாரத்தில் சருமப் பிரச்சினைகள் இருக்கலாம். அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வது நல்லது. அதிக வேலைப்பளுவின் காரணமாக தலைவலி மற்றும் மன அழுத்தம் எற்படலாம்.

வேலையை பளுவாக நினைக்காமல், அதை இலகுவாக எடுத்துக் கொண்டால் மன அழுத்தம் உங்களிடம் இருந்து விலகிவிடும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராம நவமியன்று இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், அபூர்வ யோக பலன் தரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News