மகரத்தில் பெயர்ச்சி ஆகும் சூரியன்: பொங்கல் முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம்

Surya Gochar: சூரியன் மகர ராசியில் பெயர்ச்சி அடைவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி அபரிமிதமான நற்பலன்களை அள்ளிக்கொடுக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 4, 2024, 04:40 PM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும்.
  • இந்த காலகட்டத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
மகரத்தில் பெயர்ச்சி ஆகும் சூரியன்: பொங்கல் முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் title=

சூரியன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் இந்த மாற்றங்களின் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகள் காணப்படுகின்றன. 

சூரியன் பெயர்ச்சி

சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். 2024ல் சூரியன் மீண்டும் தனது ராசியை மாற்றப்போகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் மார்கழி முடிந்து தை பிறக்கும் நாளன்று சூரியன் பெயர்ச்சி அடைகிறார். இது தைப் பொங்கல் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி, சூரியன் தனுசு ராசியிலிருந்து வெளியேறி மகர ராசியில் பெயர்ச்சி அடைவார். 

சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பதை சங்கராந்தி என்று அழைக்கிறோம். சூரியன் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அந்த மாற்றத்தை அந்த ராசியின் பெயர் கொண்ட சங்கராந்தி என்று கூறுவது வழக்கம். அந்த விதத்தில் தை முதல் நாளில் சூரியன் மகர ராசியில் பெயர்ச்சி ஆவதால் இந்த நாள் மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகின்றது. 

இந்து மதத்தில் மகர சங்கராந்திக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. மகர ராசியில் சூரியனின் சஞ்சாரம் பொதுவாக உலக மக்களுக்கு செழிப்பு, சந்தோஷம், வெற்றி ஆகியவற்றை அளிக்கும். சூரியன் மகர ராசியில் பெயர்ச்சி அடைவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி அபரிமிதமான நற்பலன்களை அள்ளிக்கொடுக்கும். இந்த பொங்கல் முதல் இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும், லாபம் அதிகரிக்கும். துன்பங்கள் தொலைந்தோடும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

பொங்கல் முதல் அற்புதமான நற்பலன்களை பெறப்போகும் ராசிகள்

விருச்சிக ராசி (Scorpio)

ஜோதிட சாஸ்திரப்படி விருச்சிக ராசிக்காரர்கள் சூரியனின் சஞ்சாரத்தால் சுப பலன்களைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் கடந்த காலத்தில் செய்த காரியங்கள் நல்ல பலனைத் தரும். உத்தியோகபூர்வ துறையில் சிறப்பாக செயல்பட முடியும். இந்த நேரத்தில், நீங்கள் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ளலாம். இந்த பயனங்களால் அற்புதமான நற்பலன்களை பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உயர்கல்விக்கு திட்டமிடும் மாணவர்களும் இந்த பெயர்ச்சியிப் பலனால் வெற்றி பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் படிக்க | 2024 குரு பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகள் தொட்டதெல்லாம் வெற்றி தான்..!!

தனுசு ராசி (Sagittarius)

தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ப மட்டுமே பலன் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களும் இந்த காலகட்டத்தில் வெற்றி பெறுவார்கள். பொருளாதாரத் துறையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும்.

மீன ராசி (Pisces)

ஜோதிட சாஸ்திரத்தின்படி, மீன ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், அவர்கள் தங்கள் பணியிடத்தில் சிறப்பான பாராட்டுதல்களைப் பெறுவார்கள். இந்த காலத்தில் மீன ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய ஊயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனுடன், இந்த காலகட்டத்தில் உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களை முழுமையாக ஆதரிக்கும். அதே சமயம் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் வெற்றி பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இந்த காலத்தில் லாபம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உங்கள் வாழ்க்கை துணையுடன் தரமான நேரத்தை செலவிட உங்களுக்கு நேரம் கிடைக்கும்.

மேலும் படிக்க | ராகு கேது நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு 2024 ஆரம்பமே அதிரடி... ராஜயோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News