கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: ராஜ வாழ்க்கை வாழப் போகும் 3 ராசிக்காரர்கள்

Sevvai Peyarchi 2023 : தைரியம் மற்றும் ஆற்றலின் காரணியான செவ்வாய் ஆகஸ்ட் 18, 2023 அன்று கன்னி ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 7, 2023, 02:45 PM IST
  • உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து, முழு உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள்.
  • நிலம், சொத்து போன்ற விஷயங்களில் உங்கள் விருப்பம் நிறைவேறும்.
  • வேலையில் திடீர் முன்னேற்றம் மற்றும் எதிரிகளை வெல்லும் வாய்ப்புகள் பெறுவீர்கள்.
கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: ராஜ வாழ்க்கை வாழப் போகும் 3 ராசிக்காரர்கள் title=

கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி 2023: கிரகங்களின் தளபதியும், தைரியம் மற்றும் ஆற்றலுக்கும் காரணியான செவ்வாய் கிரகம், ஆகஸ்ட் 18, 2023 அன்று மாலை 3.14 மணிக்கு கன்னி ராசியில் சஞ்சரிக்கப் போகிறது. இங்கே அவர் அக்டோபர் 3 வரை அமர்ந்திருப்பார். தைரியம், வீரம், கோபம், நிலம் ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் கருதப்படுகிறார். செவ்வாய் அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக கருதப்படுகிறது. இதனால் சில நன்மையும் நடக்க வாய்ப்புள்ளது. இந்த செவ்வாய் சஞ்சாரத்தால் பல ராசிக்காரர்கள் லாப முகத்தைப் பார்க்கப் போகிறார்கள். செவ்வாய் தைரியம், வலிமை, வீரம், வீரம் ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கிரகம் ஆகஸ்ட் 18ம் தேதி கன்னி ராசிக்குள் நுழைகிறது. இதன் விளைவாக, எந்த ராசிகளுக்கு அதீத பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் லக்னம் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதி. எட்டாம் வீட்டின் அதிபதி ஆறாவது வீட்டில் சஞ்சரிப்பது விபரீத ராஜயோகத்தை உருவாக்குகிறது. செவ்வாய் உங்கள் ஆறாவது வீட்டில் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் சுப பலன்களைப் பெறலாம். இந்த காலகட்டத்தில், நீங்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள், வேலையில் திடீர் முன்னேற்றம் மற்றும் எதிரிகளை வெல்லும் வாய்ப்புகள் பெறுவீர்கள். ஆறாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால், எதிரிகளை கடுமையாக எதிர்த்துப் போராடுவீர்கள், நீதிமன்றம் அல்லது நிலம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்ப ஆதரவு கிடைக்கும்.

மேலும் படிக்க | குரு தரும் கோடீஸ்வர யோகம்.. ஆவணி முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

கடக ராசி: செவ்வாய் உங்கள் கேந்திரம் மற்றும் திரிகோண வீட்டிற்கு அதாவது ஐந்தாம் மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதால் கடக ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் கிரகம் செவ்வாய் ஆவார். கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி உங்கள் மூன்றாவது வீட்டில் அதாவது தைரியம், சகோதர-சகோதரி மற்றும் குறுகிய பயணங்களில் இருக்கும். செவ்வாய் மூன்றாவது வீட்டின் காரணியாக இருக்கிறார் மற்றும் இந்த வீட்டில் சுப பலன்களைத் தருகிறார். இந்த காலகட்டத்தில், உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து, முழு உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். குறுகிய பயணங்களைத் தவிர்க்க வேண்டாம், ஏனெனில் இது தொழில் அல்லது நிதி நிலைமைக்கு நல்லது. இந்த நேரத்தில், நீங்கள் உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

விருச்சிக ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதி. ஆகஸ்ட் 18 அன்று, செவ்வாய் உங்கள் பதினொன்றாவது வீட்டில் அதாவது லாபம் மற்றும் ஆசைகளின் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால் இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிலம், சொத்து போன்ற விஷயங்களில் உங்கள் விருப்பம் நிறைவேறும். கடந்த சில நாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய நபர்களைத் தொடர்புகொள்வது நன்மை பயக்கும். உங்கள் உடல்நிலையில் கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆகஸ்டில் உருவாகும் 2 ராஜயோகங்கள்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், உச்சம் தொடுவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News