நவம்பர் 24 ஆம் குரு பெயர்ச்சி, இந்த 3 ராசிகளுக்கு எச்சரிக்கை காலம், ஜாக்கிரதை

குரு மார்கி 2022: ஜூலை 29 அன்று குரு வக்ர பெயர்ச்சி ஆனார். தற்போது நவம்பர் வரை மட்டுமே மீனத்தில் வக்ர நிலையில் குரு கிரகம் இருக்கும். இதனால் சில ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 23, 2022, 08:57 AM IST
  • இந்த 3 ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம்
  • குரு மார்கி 2022
  • வியாழன் கிரகத்தை வலுப்படுத்துவதற்கான பரிகாரங்கள்
நவம்பர் 24 ஆம் குரு பெயர்ச்சி, இந்த 3 ராசிகளுக்கு எச்சரிக்கை காலம், ஜாக்கிரதை title=

குரு மார்கி 2022: செல்வம், ஆடம்பரம், செல்வம், காதல் மற்றும் மகிழ்ச்சி போன்றவற்றின் காரணியாக குரு பிருஹஸ்பதி கருதப்படுகிறார். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் வியாழன் கிரகத்தின் நிலை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது வியாழன் கிரகம் மீன ராசியில் சஞ்சரித்து வருகிறது. ஜூலை 29 அன்று வியாழன் மீனத்தில் வக்ர பெயர்ச்சி ஆனார். இப்போது நவம்பர் 24, 2022 அன்று, மீண்டும் ஒரு பெயர்ச்சி ஆக உள்ளது. இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்-

மேஷம்- வியாழன் கிரகத்தின் பிற்போக்கு நிலை மேஷ ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். குரு சஞ்சாரம் செய்யும் போது உங்கள் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும். எந்த வேலையிலும் செய்யும் முன் தயவு செய்து அவசரப்பட வேண்டாம். 

மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களின் கதி சூரியனைப் போல பிரகாசிக்கும்

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களின் வியாழன் கிரகத்தின் பிற்போக்கு நிலை மிகவும் அதிகமான வலியை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் நீங்கள் பணியிடத்தில் கூடுதல் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் இயல்பில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து செல்வதில் சிக்கல் வரலாம்.

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்கள் வியாழன் கிரகம் சஞ்சரிக்கும் வரை பணம் தொடர்பான வேலைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொறுமையாய் இருக்கவும். இந்தக் காலகட்டத்தில் நண்பர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். கட்டிடம் அல்லது வாகனம் வாங்கலாம்.

வியாழன் கிரகத்தை வலுப்படுத்துவதற்கான பரிகாரங்கள்-

வியாழன் கிரகத்தின் சுப நிலைக்கு வியாழக்கிழமை மிகவும் சாதகமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் விஷ்ணுவை வழிபட வேண்டும். மஞ்சள் பொருட்களை தானம் செய்ய வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | செப்டம்பரில் மாறும் கிரகங்களால் அமாவாசையில் இருந்து தலைவிதி மாறும் ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News