அவுட்டாகி வெளியேறும் ஸ்மித்... மைதானத்தில் அரபிக் குத்து - ட்விட்டரில் டிரெண்டிங்

இந்தியாவிற்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் அவுட்டாகி பெவிலியன் திரும்பியபோது, மைதானத்தில் அரபிக் குத்து பாடல் ஒலிக்கப்பட்டது.

Written by - Sudharsan G | Last Updated : Sep 26, 2022, 03:04 AM IST
  • இந்திய அணிக்கு 187 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
  • அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
  • ஆஸ்திரேலிய வீரர்கள் கேம்ரூன் க்ரீன், டிம் டேவிட் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
அவுட்டாகி வெளியேறும் ஸ்மித்... மைதானத்தில்  அரபிக் குத்து - ட்விட்டரில் டிரெண்டிங் title=

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்படாத நிலையில், இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த்-க்கு பதிலாக புவனேஷ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 186 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 54 ரன்களையும், கேம்ரூன் க்ரீன் 52 ரன்களையும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சு தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும், சஹால், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

மேலும் படிக்க | தொடரை வெல்லுமா இந்தியா... 187 ரன்கள் இலக்கு

தற்போது இந்திய அணி 187 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் விளையாடி வருகிறது. இந்நிலையில், ட்விட்டரில் ஸ்மித் அவுட்டாகி வெளியேறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, அரபிக்குத்து என்ற பெயரில் ஹேஷ்டேக் ஒன்றும் டிரெண்ட் ஆகி வருகிறது. 

சஹால் வீசிய 10ஆவது ஓவரில், தினேஷ் கார்த்திக்கின் அபார ஸ்டெம்பிங்கால் ஸ்மித் 9 (10) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது, ஆஸ்திரேலியா 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வந்தது. 

ஸ்மித் அவுட்டாகி பெவிலியனுக்கு நடந்துசென்றபோது, மைதானத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அரபிக்குத்து பாடல் ஒலிக்கப்பட்டது. ஸ்மித் அவுட்டானதால் உற்சாகத்தில் இருந்த இந்திய ரசிகர்கள், அரபிக்குத்து பாடல் மைதானத்தில் ஒலித்தவுடன் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆரவாரமாக சத்தம் போட்டனர். சர்வதேச அளவில் அரபிக்குத்து பாடல் ஹிட் என்றாலும், ஹைதராபாத் மைதானத்தில் தமிழிலேயே பாடல் ஒலிப்பரப்பட்டது. 

அரபிக்குத்து மட்டுமின்றி, ஒவ்வொரு ஓவர் முடிவிலும், ஒவ்வொரு சிக்ஸர், பவுண்டரி, விக்கெட்டுகளுக்கு பிறகு தெலுங்கு, தமிழ், ஹிந்தி திரைப்பட பாடல்கள் ஒலிப்பரப்பட்டது. தமிழ் பாடல்களான 'நாக்கு முக்கா', 'என் பேரு மீனாக்குமாரி' பாடல்களும் ஒலிப்பரப்பட்டன. 

தொடர்ந்து, மதுரை உசிலம்பட்டியில் உள்ள மவுண்ட் வியூ என்ற பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகை கத்திரினா கைஃப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது, அப்பள்ளியின் மாணவர்களுடன் அவர் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடினார். அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | சர்ச்சையாகும் தீப்தி ஷர்மாவின் 'மன்கட்' ரன் அவுட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News