IPL 2021 போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் அஸ்வின்; காரணம் என்ன

டெல்லி அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டித்  தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 26, 2021, 09:08 AM IST
  • டெல்லி கேபிடல்ஸ் அணியில் அஸ்வின் தற்காலிகமாக விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவு தான்.
  • வரலாற்றில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த 16 பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2021 போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் அஸ்வின்; காரணம் என்ன title=

IPL 2021 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற இருபதாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி,  ஐதராபாத் அணியை வென்றது. 

இந்த நிலையில் டெல்லி அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் (IPL) போட்டித்  தொடரில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் அஸ்வின் விளக்கமளித்துள்ளார். தனது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக, இருக்க வேண்டிய நிலை உள்ளதால் தற்காலிகமாக IPL போட்டியில் இருந்து விலகுகிறேன் என்றும் ஆனால், தனது குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து குணமானவுடன் மீண்டும் DC அணியில் சேர்ந்து கொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பதிவு செய்துள்ளார்.

ALSO READ | CSK vs RCB IPL 2021: மாஸ் வெற்றி பெற்றது CSK, சுருண்டு போனது RCB!

இதனையடுத்து டெல்லி அணியின் சூப்பர் பந்து வீச்சாளர் அஸ்வினின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அஸ்வினின் குடும்பத்தினர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி கேபிடல்ஸ் (DelhiCapitals)  அணியில் அஸ்வின் தற்காலிகமாக விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவு தான் என்றாலும் மாற்று வீரரை வைத்து டெல்லி அணி சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வின் 10 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்களில்,  77 டெஸ்ட் போட்டிகளிலும், 111 ஒருநாள் மற்றும் 46 T20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அவர் 409 டெஸ்ட் விக்கெட்டுகளை வைத்திருக்கிறார். வரலாற்றில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த  16 பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | IPL 2021: DC vs MI: மும்பை அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது தில்லி அணி
 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News