2023 ஆசியக் கோப்பையில் இந்திய கிரிக்கெட்டர்களின் காலவதியாகக்கூடிய சாதனைகள்

Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023இல் அனைவரின் சாதனைகளும் முறியடிக்கப்படும்... இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ஒன்றல்ல 3 அபார சாதனைகள் இன்று முறியடிக்கப்படும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 2, 2023, 09:10 AM IST
  • ஆசியக் கோப்பை போட்டிகள் இன்று இலங்கையில்
  • இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பரபரப்பான போட்டி
  • இந்திய அணி சாதனை படைக்குமா?
2023 ஆசியக் கோப்பையில் இந்திய கிரிக்கெட்டர்களின் காலவதியாகக்கூடிய சாதனைகள் title=

IND vs PAK: ஆசிய கோப்பை தொடங்கியுள்ளது, இதன் போட்டிகள் இந்த முறை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றன. இந்த போட்டி ஒருநாள் போட்டி முறையில் நடைபெறுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும். எப்போது இந்த இரு நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றாலும் அது சர்வதேச அளவில் கவனத்தைப் பெறுவதாகவே இருக்கும். அந்த வகையில், இன்று அதாவது செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் ஒன்றல்ல மூன்று பெரிய சாதனைகள் முறியடிக்கப்படலாம்.  

பாகிஸ்தான் வெற்றியுடன் தொடங்கியது

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான், ஆசிய கோப்பை 2023ஐ  வெற்றியுடன் தொடங்கியது. முல்தானில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் நேபாளத்தை பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

இலங்கையில் நடைபெறும் இன்றைய போட்டியில் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் கடும் சவாலை சந்திக்கும். இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் இந்தியா தனது 2023 ஆசியக் கோப்பை போட்டிகளைத் தொடங்கவுள்ளது.

மேலும் படிக்க | செப்டம்பர் 2 கண்டி போட்டியில் இந்திய கிரிக்கெட்டர்கள் இந்த சாதனைகளை செய்வார்களா?

சதங்களின் சாதனை முறியடிக்கப்படுமா?

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்களில் முன்னணியில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். சச்சின் பாகிஸ்தானுக்கு எதிராக 5 ஒருநாள் சதங்கள் அடித்துள்ளார். பாகிஸ்தானின் சல்மான் பட் கூட அதே எண்ணிக்கையில் சதம் அடித்துள்ளார். இரண்டாவது இடத்தில், 3 வீரர்கள் 4-4 சதங்கள் அடித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சச்சினைத் தவிர எந்த இந்தியரும் 2 சதங்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2-2 சதங்களை அடித்துள்ளனர். ஆசிய கோப்பை போட்டியில் ரோஹித் அல்லது விராட் சதம் அடித்தால், சச்சினுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக 2 சதங்களுக்கு மேல் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிராக மகேந்திர சிங் தோனி, சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், முகமது அசாருதீன் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் 2-2 சதங்கள் அடித்துள்ளனர்.

மேலும் படிக்க | ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மோதல் லேட்டஸ் அப்டேட்

பும்ராவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் பெரிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. அவர் அனில் கும்ப்ளேயின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது.  சுமார் ஒரு வருட காத்திருப்புக்குப் பிறகு, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா களம் திரும்பினார். இலங்கையின் லசித் மலிங்கா 4 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முதலிடத்தில் உள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை மூத்த சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே (4 போட்டிகளில் 7 விக்கெட்டுகள்) பெற்றுள்ளார். அதே சமயம், பும்ரா (2 போட்டியில் 4 விக்கெட்) பெற்றுள்ளார். பும்ரா இன்னும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பார்.

கங்குலியின் சாதனை

முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையும் இன்று முறியடிக்கப்படலாம். பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் ரோஹித் சதம் அடித்தால், ஒருநாள் ஆசியக் கோப்பையில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை சவுரவ் கங்குலி இழப்பார். 

கேப்டனாக தோனி ஆசிய கோப்பையில் 14 போட்டிகளில் 579 ரன்களும், கங்குலி 9 போட்டிகளில் 400 ரன்களுடன் 2வது இடத்திலும் உள்ளனர். ரோஹித் சர்மா இதுவரை 5 போட்டிகளில் 317 ரன்கள் எடுத்துள்ளார். ரோஹித் இன்னும் 84 ரன்கள் எடுத்தால், கங்குலியை பின்னுக்கு தள்ளுவார். அத்தகைய சூழ்நிலையில், கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

மேலும் படிக்க | ஆசிய கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News