AsianGames2018-Day7: 27 பதக்கங்களை வென்ற இந்தியா..!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பேட்மின்டன் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு தகுதி பெற்றார்....!  

Last Updated : Aug 25, 2018, 04:39 PM IST
AsianGames2018-Day7: 27 பதக்கங்களை வென்ற இந்தியா..!  title=

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பேட்மின்டன் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு தகுதி பெற்றார்....!  

தொடர்ந்து 7 நாளாக 18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.  இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் சுமார் 45 நாடுகள் பங்கேற்றுள்ளது. செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.

மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் முன்னணி வீராங்கனனி சாய்னா, இந்தோனேசியாவின் பிட்ரியானியை எதிர்கொண்டார். 31 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில் சாய்னா 21-6, 21-14 என்ற நேர்செட் கணக்கில் பிட்ரியானியை தோற்கடித்து, காலிறுதிக்குள் நுழைந்தார். 
 
நடக்க இருக்கும் மற்றொரு ஒற்றையர் போட்டியில் பிவி சிந்து, இந்தோனேசியாவின் டங்ஜங் கிரிகோராவுடன் மோதுகிறார். 

 

Trending News