ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டிகள் இன்று புதுதில்லியில் தொடங்குகிறது

2020 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் இருந்தே தங்கத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா விளையாடக்கூடும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 18, 2020, 12:29 PM IST
ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டிகள் இன்று புதுதில்லியில் தொடங்குகிறது title=

புது டெல்லி: இன்று தில்லியில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடங்கு,கிறது. இந்த போட்டிகள் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் வரும் மார்ச் மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 30 எடை பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. ஆண்கள் ஃப்ரீஸ்டைல், கிரேக்கோ-ரோமன் மற்றும் பெண்கள் மல்யுத்தம் என மூன்று பிரிவுகளில் இந்த போட்டி நடைபெறும்.

சாம்பியன்ஷிப் கிரேக்க-ரோமன் நிகழ்வுகளுடன் தொடங்கும். அதைத் தொடர்ந்து மல்யுத்தம் வீராங்கனைகள் மற்றும் ஃப்ரீஸ்டைல் ஆண்கள் போட்டியின் முதல் நாளில் 55, 63, 77, 87 மற்றும் 130 கிலோ பிரிவில் மல்யுத்த வீரர்கள் தங்கள் திறனை நிரூபிக்க போட்டியில் பங்கேற்பார்கள்.

முதன்மை மற்றும் தகுதிப் போட்டிகள் காலை அமர்வுகளில் நடைபெறும். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடத்தப்படும். சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் இருந்தே தங்கத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா விளையாடக்கூடும்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் போது பஜ்ரங் புனியா தனது 65 கிலோ ஃப்ரீஸ்டைல் பட்டத்தை பாதுகாக்க முயற்சிப்பார். வினேஷ் போகாட் கடந்த பதிப்பில் வென்ற 53 கிலோ வெண்கல பதக்கத்தை தங்கமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற புனியா மற்றும் வினேஷ் ஆகியோரைத் தவிர, 30 பேர் கொண்ட இந்தியா அணியில் தீபக் புனியா, ரவிக்குமார் தஹியா மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் ஆகியோரும் இடம்பெறுவார்கள்.

அன்சு மாலிக், ஆஷு மற்றும் சோனம் மாலிக் ஆகிய மூன்று இளம் வீராங்கனை இந்த போட்டியில் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்புவார்கள்.

அதேபோல இந்த ஆண்டுக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க சீனாவுக்கு அனுமதி அளிக்க இந்தியா மறுத்து விட்டது. அதாவது சீனாவில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால், சுமார் 40 பேர் கொண்ட சீன அணிக்கு விசா வழங்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தமுறை சீன அணி, இந்த தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Trending News