ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 10-விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

Last Updated : Nov 27, 2017, 11:32 AM IST
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி! title=

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பிரிட்டனில் நடந்தது. இதில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 302 ரன்களை எடுத்து. ஆஸ்திரேலியா 328 ரன்களை எடுத்தது. 

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 195 ரன்களை எடுத்து பின்தங்கியது. இதில், ஆஸ்திரேலியா ஸ்டார்க், ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட்டும் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டினர். வார்னர்-87 ரன்களும்; பான்கிராப்ட்-82 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

ஆஸ்ட்ரேலிய 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Trending News