எம்சிசியால் (MCC) கிரிக்கெட் சட்டங்களில் 'பேட்ஸ்மேன்' (Batsman) 'பேட்டர்கள்' (batter) என திருத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் 'மூன்றாவது' (3rd Man) மற்றும் 'நைட்வாட்ச்' (Nightwatchman) போன்ற பாலின-நடுநிலை சொற்களைப் பயன்படுத்தி வருவதால் இந்த மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக எம்சிசி அறிவித்துள்ளது.
கிரிக்கெட் சட்டங்களை நிலைநிறுத்தும் அமைப்பான லண்டனில் உள்ள மேரில்போன் கிரிக்கெட் கிளப் (MCC), அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட் சொற்களில் மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. MCC நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 'பேட்ஸ்மேன்' மற்றும்/அல்லது 'பேட்ஸ்மென்' என்ற சொல் அதிகாரப்பூர்வமாக பாலின-நடுநிலை வார்த்தையான 'பேட்டர்கள்' என்று மாற்றப்படும். கிரிக்கெட் வரலாற்றில் 'பேட்ஸ்மேன்/பேட்ஸ்மென்' என்ற வார்த்தைகள் 1744 முதல் பயன்பாட்டில் உள்ளன. கிரிக்கெட் விளையாட்டில் பாலினம் பாகுபாடின்றி பெண் வீரர்களுக்கு அதிக வரவேற்பு அளிக்க இந்த மாற்றம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எம்சிசி வெளியிட்ட அறிக்கையில்: "2017 ல் கடைசி மறுசீரமைப்பின் போது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் உள்ள முக்கிய நபர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த சொல் 'பேட்ஸ்மேன்' ஆக இருக்கும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் கிரிக்கெட்டில் 'பேட்டர்கள்' என்ற சொல் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே நாங்களும் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். பந்து வீச்சாளர்கள் மற்றும் பீல்டர்களின் பெயர்கள் எங்களின் சட்ட விதிகளுக்குள் ஏற்கனவே உள்ளதால் அதன் பெயர்கள் மாற்றப்படாது.
MCC has today announced amendments to the Laws of Cricket to use the gender-neutral terms “batter” and “batters”, rather than “batsman” or “batsmen”.
— Marylebone Cricket Club (@MCCOfficial) September 22, 2021
எம்சிசியின் கூடுதல் செயலாளர் ஜேமி காக்ஸில் கூறியதாவது, வரும் ஆண்டுகளில் பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டு இந்த மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டது. "பேட்டர்கள்" என்ற வார்த்தையின் பயன்பாடு கிரிக்கெட் உலகில் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த புதிய மாற்றங்கள் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறினார்.
கடந்த சில வருடங்களாக மகளிர் கிரிக்கெட்டை நேரில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், லார்ட்ஸ் மைதானத்தில் சுமார் 24 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு கோவிட் -19 வருவதற்கு முன்பு 86,174 பார்வையாளர்கள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான மகளிர் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண வந்தனர்.
இது அந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகப்படியான ரசிகர்கள் எண்ணிக்கையில் சாதனை படைத்தது. கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்துக்கு இடையே 2016 ஆம் ஆண்டு ஆண்கள் இறுதிப் போட்டியில் 66 ஆயிரம் பேர் கலந்து கொண்ட சாதனைகளை முறியடித்தது. கூடுதலாக, இங்கிலாந்தில் நடந்த உள்நாட்டு பெண்கள் போட்டியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓவலில் நடந்த போட்டியில் 17,116 பார்வையாளர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR