மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களை விளையாட தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், முதல் டி20 போட்டி கடந்த செப். 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இரண்டாவது டி20, கௌகாத்தியில் பர்சபரா மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, கடைசி டி20 போட்டி மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் நாளை மறுதினம் (அக். 4) நடக்கிறது.
இதையடுத்து, 3 ஒருநாள் போட்டிகளை இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இப்போட்டிகள் அக். 6, 9, 11ஆம் தேதிகளில் முறையே லக்னோ, ராஞ்சி, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | யுஸ்வேந்திர சாஹல் மனைவியின் ரகசிய காதலன்; இன்ஸ்டாகிராமில் வெளியான புகைப்படம்
இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில், ஷிகர் தவான் கேப்டனாகவும், ஷ்ரேயஸ் ஐயர் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட், ராஜத் பட்டீதர், ஷாபாஸ் அகமது, முகேஷ் குமார், ராகுல் திரிபாதி, ரவி பிஷ்னோய் ஆகியோர் இந்த 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர்.
Shikhar Dhawan (C), Shreyas Iyer (VC), Ruturaj Gaikwad, Shubhman Gill, Rajat Patidar, Rahul Tripathi, Ishan Kishan (WK), Sanju Samson (WK), Shahbaz Ahmed, Shardul Thakur, Kuldeep Yadav, Ravi Bishnoi, Mukesh Kumar, Avesh Khan, Mohd. Siraj, Deepak Chahar.#TeamIndia | #INDvSA
— BCCI (@BCCI) October 2, 2022
இவர்கள் 6 பேரும் தங்களது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியை காத்திருக்கின்றனர். இவர்களுடன் சுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலே குறிப்பிட்ட 6 பேரில், முகேஷ் குமாரை தவிர்த்து அனைவரும் ஐபிஎல் தொடர் மூலம் கவனம் பெற்றவர்கள்.
முகேஷ் குமார், முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். பெங்கால் அணியின் வேகப்பந்துவீச்சாளரான இவர் 30 முதல் தர போட்டிகளில் விளையாடி 109 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, இந்திய ஏ அணிக்காக 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளையும், 17 முதல் தர டி20 போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
மேலும், சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முகேஷ் குமார் இந்திய அணிக்கா விளையாடினார். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதுமட்டுமின்றி, தற்போது நடைபெற்று வரும் இரானி கோப்பை தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவருக்கு இந்திய அணியின் கதவு திறக்கப்பட்டுள்ளது.
Mukesh Kumar’s impressive rise continues. Four for next to nothing on the opening morning of the Irani Cup in Rajkot. Here’s a snippet on how he got noticed. Full link https://t.co/789SeJ5rys pic.twitter.com/yLRHhKOqSV
— Shashank Kishore (@captainshanky) October 1, 2022
ஆசிய கோப்பையில் உடல்நலக்குறைவு காரணமாக பாதியிலேயே விலகிய ஆவேஷ் கான் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சு தரப்பில் முகமது சிராஜ், தீபக் சஹார், ஆவேஷ் கான், ஷர்துல் தாக்கூர் உடன் முகேஷ் குமாரும் இணைந்துள்ளார். மேலும், இவருக்கு நாளை மறுநாள் போட்டியிலேயே வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்துவீச்சில் ஷாபாஸ் அகமது, குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோர் உள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உம்ரான் மாலிக், பிருத்வி ஷா ஆகியோருக்கு இம்முறையும் வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி : ஷிகர் தவான் (கேப்டன்), ஷ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ராஜத் பட்டீதர், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், ஆவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சஹார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ