T20 World Cup: இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட t20 2021 உலக கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ

Written by - RK Spark | Last Updated : Sep 8, 2021, 10:05 PM IST
T20 World Cup: இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ  title=

T20 World Cup 2021: டி20 உலகக் கோப்பை 2007ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 12 அணிகள் பங்குபெறும் இந்த போட்டியில், ஐசிசி தர வரிசையில் உள்ள டாப் 8 அணிகள் நேரடியாக உள்ளே செல்கின்றன. மீதமுள்ள 4 இடங்களுக்கு 8 அணிகள் போட்டி போடுகின்றன. முதல் ரவுண்டில் தேர்ந்தெடுக்கப்படும் நான்கு அணிகளும் சூப்பர் 12 குழுவில் இடம்பெறும்.  ஐசிசி (International Cricket Council) தரவரிசையில் மிகவும் பின்தங்கி உள்ளதால் ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் போன்ற அணிகளும் முதல் ரவுண்டில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 12 குழுவில் இடம் பெற முடியும். 

சூப்பர் 12 அணிகள் குரூப் ஏ (Group A), குரூப் பி (Group B) என்று இரண்டாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 6 அணிகள் இடம்பெறுகின்றன.  Group A பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் Group B பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. முதல் ரவுண்டில் தேர்ந்தெடுக்கப்படும் நான்கு அணிகள் "குரூப் ஏ, குரூப் பி" பிரிவுகளில் இடம் பெறும்.

ஒரே பிரிவில் இந்திய (India)அணியும், பாகிஸ்தான் (Pakistan) அணியும் இடம் பெற்றிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பரம எதிரிகளான இரண்டு அணிகள் மோதும் ஆட்டத்தை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் T20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் அறிவிப்பு வெளிவராமல் இருந்தது.  தற்போது வீரர்களின் பெயர்களை அறிவித்துள்ளது பிசிசிஐ.  விராட் கோலி (கேப்டன்) தலைமையில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா , புவனேஸ்வர் குமார், முகமட் ஷமி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.  கூடுதல் வீரர்களாக ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சஹர் இடம்பெற்றுள்ளனர்.  மேலும் இந்திய அணிக்கு மெண்டர் ஆக தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News