புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் தாக்கம் விளையாட்டுகளிலும் தெளிவாகத் தெரிகிறது. கொரோனாவின் தாக்கத்தால், உலகின் பெரிய அளவிலான லீக் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒமிக்ரன் பிறழ்வு கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவின் ரஞ்சி டிராபி உட்பட பல போட்டித்தொடர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ரஞ்சி கோப்பை ஒத்திப் போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள் காரணமாக இந்தியாவின் தலைசிறந்த உள்நாட்டு முதல்தர போட்டியான ரஞ்சி டிராபி (Ranji Trophy), திட்டமிட்டபடி ஜனவரி 13ஆம் தேதியன்று தொடங்காது. பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிசிசிஐ தனது, அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கிலும் தகவல் வெளியிட்டுள்ளது.
NEWS : BCCI postpones Ranji Trophy, Col C K Nayudu Trophy & Senior Women’s T20 League for 2021-22 season.
The ongoing Cooch Behar Trophy will continue as scheduled.
More Details https://t.co/YRhOyk6680 pic.twitter.com/PvrlZZusSF
— BCCI (@BCCI) January 4, 2022
ரஞ்சி டிராபி போட்டித்தொடரின் முதல் சுற்று ஜனவரி 13 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது, ஆனால், ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸால் போட்டிகள் (Omicron Variant) தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பல வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
'ரஞ்சி டிராபி தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அது ஜனவரி 13 முதல் தொடங்காது. சமீபத்தில், பெங்கால் அணியில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, அதில் ஐந்து பேர் கிரிக்கெட் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்று பிசிசிஐ போட்டிக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
Also Read | தள்ளிப்போகிறதா ஐபிஎல் ஏலம்? புதிய அணிகளின் நிலைமை என்ன?
மும்பையைச் சேர்ந்த சிவம் துபேயும் தனிமைப்படுத்தலில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட 6 நகரங்களில் ரஞ்சிக் கோப்பை நடைபெற இருந்தது.
ரஞ்சிக் கோப்பை என்பது இந்தியாவின் பிராந்திய மற்றும் மாநில துடுப்பாட்ட வாரியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி ஆகும். உள்நாட்டில் விளையாடும் முதல் தர கிரிக்கெட் தொடர்களில் ரஞ்சிக் கோப்பைப் போட்டி, முதலிடத்தைப் பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பால், கடந்த ஆண்டு ரஞ்சிக் கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1934ம் ஆண்டு முதல் ரஞ்சிக் கோப்பை தொடர், தொடர்ந்து நடைபெற்றுவந்தது. கொரோனாவின் தாக்கத்தால் போட்டிகள் இந்த ஆண்டும் ஒத்திப் போடப்பட்டுள்ளன.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது
நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 30000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் (Corona Virus) பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு நாட்டில் பல கிரிக்கெட் மற்றும் கால்பந்து லீக்குகள் நிறுத்தப்பட்டன.
ஒத்திப்போடப்பட்ட போட்டிகள் எப்போது நடைபெறும் என்பது உறுதியாக தெரியவில்லை.
ALSO READ | புஜாராவை எச்சரித்த இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR