India National Cricket Team: கிரிக்கெட் விளையாட்டு என்பது தற்போது அதன் புதிய பரிணாமத்தில் பயணித்து வருகிறது. டெஸ்ட், ஓடிஐ, டி20 போன்ற பார்மட் மாற்றங்கள் ஒருபுறம் இருக்க, சர்வதேச கிரிக்கெட் vs ஃபிரான்சைஸ் கிரிக்கெட் என்ற பிரச்னையும் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் என்பது உலகளவில் தேசிய அணிகள் தங்களுக்குள் மோதும் அரங்காக உள்ள நிலையில், பிரான்சைஸ் கிரிக்கெட் விறுவிறுப்பையும் பணத்தையும் பிரதானமாக கொண்டு இயங்கி வருகிறது.
பிரான்சைஸ் கிரிக்கெட், விளையாட்டை சிதைக்கிறது என குரல்கள் எழுந்தாலும் மேற்கிந்திய தீவுகள் போன்ற மிகவும் பின்தங்கிய பகுதியில் இருந்து வரும் திறமையான வீரர்களுக்கு வாழ்வளிக்கும் கருவியாகவும் அது உள்ளது. எனவே, கால்பந்தில் இருப்பது போன்று பிரான்சைஸ் கிரிக்கெட்டையும் தவிர்க்க இயலாது. இருப்பினும், சர்வதேச அளவில் அணிகள் மோதிக்கொள்வதும் அவசியாகிறது. அந்த வகையில், இரண்டையும் ஒரு தராசில் நிகராக வைத்திருப்பதே உதவும் எனலாம்.
முன்னிலை பெறும் ஐபிஎல்!
பிரான்சைஸ் கிரிக்கெட் பல நாடுகளில் பிரச்னையை ஏற்படுத்தியது. வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடுவதை விட பிரான்சைஸ் அணிக்காக விளையாடுவதற்கு முன்னுரிமை அளிப்பதாக கூறி பல வீரர்களை அந்தந்த வாரியங்கள் தடையும் செய்திருக்கின்றன. தற்போது இது கிரிக்கெட்டில் அதிகம் செல்வம் கொழிக்கும் நாடான இந்தியாவையே பாதிருப்பதை பார்க்க முடிகிறது.
பல முன்னணி வீரர்கள் வேலைப்பளூ மேலாண்மை உள்ளிட்ட காரணங்களை கூறி தேசிய அணிக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து ஐபிஎல் போட்டிகளுக்கு தயார் ஆவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக, ரஞ்சி டிராபி (Ranji Trophy 2024) போன்ற நாட்டின் முதன்மையாக முதல் தர கிரிக்கெட்டில் போட்டியில் விளையாடுவதை விடுத்து, ஐபிஎல் போட்டிகளுக்கு (IPL 2024) தயார் ஆவதை பிரதானமாக வைத்திருப்பது இங்கு பிரச்னயைாகிறது.
வீரர்கள் அதிரடி நீக்கம் - காரணம்?
இதுபோன்ற குற்றச்சாட்டில் இருந்த இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை பிசிசிஐ (BCCI) அதன் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளது. இருப்பினும், இதுவரை என்ன பிரச்னை என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாவிட்டாலும் ரஞ்சி டிராபியில் விளையாடும்படி பிசிசிஐ அறிவுறுத்தியும், அதற்கு இவ்விருவரும் செவிக்கொடுக்கவில்லை என்பது முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.
அந்த வகையில், இந்த பிரச்னையை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கு, ஐபிஎல் போட்டிகளுக்கு இணையாக முதல் தர போட்டிகளுக்கும் ஊதியத்தை உயர்த்த பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, நேற்று வெளியான ஒப்பந்த பட்டியலில், ஒவ்வொரு தரவரிசைக்கு எவ்வளவு ஊதியம் என பிசிசிஐ உறுதிசெய்யவில்லை. எனவே, உள்நாட்டு தொடருக்கு மட்டுமின்றி, தேசிய அணியில் இடம்பெறும் வீரர்களுக்கான போட்டி சம்பளம், மொத்த ஊதியத்தை உயர்த்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஊதிய உயர்வு
உதாரணமாக, 10 ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடினால் ரூ.25 லட்சம் ஊதியமாக கிடைக்கும். ஆனால் ஐபிஎல் தொடரில் அடிப்படை தொகையே ஒரு வீரருக்கு ரூ.20 லட்சமாகிறது. ஊதியத்தில் இவ்வளவு வித்தியாசம் இருக்கும், ஒரு வீரர் 10 டெஸ்ட் போட்டிகளில் தன்னை வறுத்திக்கொண்டு விளையாடுவதற்கு, ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தவே நினைப்பார். எனவே, ரஞ்சி டிராபியில் விளையாடுபவர்களான ஊதியத்தை உயர்த்த பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | BCCI: ஷ்ரேயாஸ், இஷான் கிஷன் மட்டுமில்லை... இந்த 4 முக்கிய வீரர்களும் அதிரடி நீக்கம்!
இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் பார்க்கும்போது, பிசிசிஐ இந்திய அணி நிர்வாகத்திடம் இதற்கான தீர்வு குறித்த பரிந்துரையை கேட்டுள்ளது. மேலும், டெஸ்ட் தொடரின் மாண்பை தொடரும் வகையில், இந்தி அணி நிர்வாகமும் அதிரடியான முடிவுகளை எடுக்க பிசிசிஐக்கு உந்துதல் அளித்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, முதல் தர போட்டிகளுக்காக அர்ப்பணித்த வீரர்களுக்கு, ஐபிஎல் விளையாடும் வீரர்களை போன்ற மதிப்பை வழங்க வேண்டும் என்றும் அதன்படி தற்போதைய ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பரிந்துரைகள்
மேலும், ரஞ்சி விளையாடும் வீரர்களுக்கு தற்போதைய ஊதியத்தை விட மூன்று மடங்கு, அதாவது ரூ.75 லட்சம் ஊதியாமாக வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்திய சீனியர் அணிக்காக (Team India) டெஸ்டில் ஓராண்டு முழுவதும் விளையாடும்பட்சத்தில் அந்த வீரருக்கு ரூ.15 கோடி அளிக்கலாம் என்றும் அதாவது ஐபிஎல் தொடரில் முன்னணி வீரர்களுக்கு அளிக்கப்படும் தொகைக்கு நிகரான ஊதியம் என்றும் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிசிசிஐ முடிவு என்ன?
இருப்பினும், பிசிசிஐ மூன்று மடங்கு ஊதிய அதிகரிப்பு உள்ளிட்ட இந்த பரிந்துரைகளை ஏற்கவில்லை என கூறப்படும் நிலையில், தொடர்ந்து ஊதிய உயர்வு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இதுசார்ந்து பிசிசிஐ விரைவில் தனது முடிவை அறிவிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | INDvsENG: ஒழுங்கா ஆடல தம்பி நீ வெளியே போ.. ! இளம் வீரருக்கு பதிலாக ஆடும் படிக்கல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ