ஆசிய கோப்பை: இந்திய அணியில் இவர்களுக்கு வாய்ப்பு சந்தேகம் - பிசிசிஐ பிளான்

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாது என பிசிசிஐ வட்டாரங்கள் கூறியுள்ளது. இதனால் அந்த வீரர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 15, 2023, 05:57 PM IST
  • விரைவில் ஆசிய கோப்பை
  • இந்திய அணியில் யார்?
  • பிசிசிஐ எடுக்கப்போகும் முடிவு
ஆசிய கோப்பை: இந்திய அணியில் இவர்களுக்கு வாய்ப்பு சந்தேகம் - பிசிசிஐ பிளான் title=

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் அயர்லாந்து தொடரில் பங்கேற்க பும்ரா தலைமையிலான இந்திய அணி அந்நாட்டுக்கு சென்றுள்ளது. அடுத்ததாக ஆசிய கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் யாருக்கெல்லாம் வாய்ப்பளிக்கலாம் என்பது குறித்து பிசிசிஐ முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது.  அண்மையில் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிடில் ஆர்டர் கவலைக்குரிய வகையில் இருப்பதாக தெரிவித்ததால், அந்த இடத்துக்கு தகுதியான வீரர் யாரை எடுக்கலாம் என்பது குறித்தும் பிசிசிஐ தீவிரமாக பரிசீலிக்க இருக்கிறது.  

டாப் ஆர்டர்

இந்திய அணியில் டாப் ஆர்டரைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். ரோஹித் மற்றும் கோஹ்லி ஆகியோர் அனுபவமிக்க வீரர்கள். சுப்மான் கில் கடந்த ஒருவருடமாக சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார். அதே இடத்துக்கு இஷான் கிஷனும் யோசனையில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓப்பனிங் இறங்கி சிறப்பாக ஆடினார். ஆனால், கில்லுக்கு மாற்றாக அவரை எடுக்க வாய்ப்பில்லை. 

மேலும் படிக்க | குல்தீப் யாதவ் மறுபிரவேசம்: அந்த பிளேயருக்கு நிறைய கடன்பட்டிருக்கிறார் - அபினவ் முகுந்த்

4-வது இடத்தில் யார்?

சமீப காலமாக இந்தியாவுக்கு 4வது இடம் பலவீனமானதாக உள்ளது. 2019 உலகக் கோப்பைக்கு முன்பும் இதே நிச்சயமற்ற நிலை இருந்தது. அம்பதி ராயுடு ஒரு சில போட்டிகளில் ஆடினாலும், உலக கோப்பையில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், இப்போது அதனை விட குழப்பமாக உள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் உடல் தகுதி மற்றும் ஃபார்மில் இருந்திருந்தால், அவர் இந்த பாத்திரத்திற்கான முதன்மை தேர்வாக இருந்திருக்கலாம். அவர் இன்னும் கிரிக்கெட் களத்துக்கு முழுமையாக திரும்பவில்லை. 

கே.எல்.ராகுல் என்றால் அவரும் இப்போது தான் காயத்தில் இருந்து திரும்பியிருக்கிறார். ஆனால் உடல் தகுதி குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோரும் அந்த இடத்துக்கான போட்டியில் இருக்கிறார்கள். சூர்யகுமார் யாதவுக்கு ஒருநாள் போட்டியில் போதுமான வாய்ப்பு கொடுத்துவிட்டதால் சஞ்சு அல்லது திலக் வர்மா பரிசீலிக்கப்படுவார்கள். அதுவும் ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் ஆகியோர் உடல் தகுதியை எட்டாத சூழலில் மட்டுமே.

சுழற்பந்துவீச்சாளர்

ரவீந்திர ஜடேஜாவுடன் மற்றொரு சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இருக்க வாய்ப்புள்ளது. 3வது சுழற்பந்துவீச்சாளர் யார் என்பதில் தான் போட்டி கடுமையாக இருக்கிறது. யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அக்சர் படேல் ஆகியோரில் யாரேனும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். ஆல்ரவுண்டர் வேண்டும் என சிந்தித்தால் சாஹலுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.

வேகப்பந்துவீச்சு

பும்ரா இப்போது முழு உடல் தகுதியுடன் இந்திய அணிக்கு திரும்பிவிட்டதால் அவர், முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் மும்மூர்த்திகளாக இருப்பார்கள். உம்ரான் மாலிக் பந்துவீச்சில் சீரற்று இருப்பதால் அவரை அசிய கோப்பைக்கான அணியில் இந்திய அணியின் தேர்வாளர்கள் பரிசீலிக்கமாட்டார்கள் என தெரிகிறது. அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் போட்டியில் இருக்கிறார்கள். இவர்கள் இருவரில் யாரை பிசிசிஐ தேர்ந்தெடுக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

மேலும் படிக்க | இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பில்லை...? - வேகத்திற்கு இனி வேற வீரர் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News