முடிந்தது ரோஹித் காலம்... இனி மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா!

IPL Auction 2024: வரும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா (Hardik Pandya Captain) நியமிக்கப்பட்டுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 15, 2023, 07:02 PM IST
  • ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிச. 19ஆம் தேதி நடைபெறுகிறது.
  • ரோஹித் சர்மா தலைமையில் 5 முறை மும்பை கோப்பையை வென்றுள்ளது.
  • ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியிடம் இருந்து ரூ.15 கோடிக்கு மும்பை வாங்கியது.
முடிந்தது ரோஹித் காலம்... இனி மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா! title=

IPL Auction 2024: 2024ஆம் ஆண்டில் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள 17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் மீது தற்போதே பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துவிட்டன. வரும் டிச.19ஆம் தேதி துபாயில் இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் நடைபெற உள்ள நிலையில், அதுசார்ந்த பல்வேறு பரபரப்பான செய்திகளும், தகவல்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. 

கடந்த நவ. 26ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 10 அணிகளும் 2024 சீசனுக்கான தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கும் வீரர்கள் ஆகியோரின் பட்டியலை இறுதி செய்தன. மேலும், கடந்த டிச.12ஆம் தேதி டிரேட் செய்வதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது. டிரேடிங்கில் முக்கியமாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கே மீண்டும் திரும்பினார். மேலும், மும்பை அணியின் ஆல்-ரவுண்டர் கேம்ரூன் கிரீன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். 

அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்பியது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஏனென்றால், ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், மும்பை அணிக்கு திரும்பினால் அவருக்குதான் கேப்டன் பதவி கொடுக்கும் நெருக்கடி ஏற்படும் என கூறப்பட்டது. மேலும், ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து எடுப்பது ஒருபுறம், அணியில் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட பும்ராவுக்கு ஹர்திக் பாண்டியாவின் வருகை என்பது பெரும் கேப்டன் கனவை பொய்யாக்கும் என கூறப்பட்டது. 

மேலும் படிக்க | மறக்குமா நெஞ்சம்: 2023 உலகக் கோப்பை சுவாரஸ்யங்களும்... சர்ச்சைகளும்...!

இந்த அனைத்து அனுமானங்களையும் மெய்யாக்கும் வகையில், ஹர்திக் பாண்டியாவை அடுத்த சீசனின் கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அறிவித்துள்ளது. குறிப்பாக, ரோஹித் சர்மா 5 கோப்பைகளை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பெற்றுத் தந்த கேப்டன் ஆவார். அவர் தலைமையில் கடைசியாக 2020ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது, அப்போது ஹர்திக் பாண்டியா அணியில் இருந்தார். 

2022, 2023 ஆகிய சீசனில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்து முதல்முறை கோப்பையை கைப்பற்றினார். இரண்டாவது சீசனில் இறுதிப்போட்டி வரை குஜராத் செல்ல ஹர்திக் உறுதுணையாக இருந்தார். மும்பை கடந்த சில சீசன்களாக சறுக்கலை சந்தித்து வரும் நிலையில், அணியில் தேவைப்படும் இந்திய ஆல்-ரவுண்டர் மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடிய புதிய கேப்டன் ஆகியவற்றை ஹர்திக் பாண்டியா ஈஸியாக பூர்த்தி செய்துள்ளார். 

டிச. 19ஆம் தேதி ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. டிச. 12ஆம் தேதியோடு டிரேடிங்கும் முடிந்து அணிகள் இறுதிசெய்யப்பட்டுவிட்டன. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த அறிவிப்பு ரோஹித் சர்மாவின் ஐபிஎல் எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தி உள்ளது. ஒருவேளை ரோஹித் சர்மா சாதாரண வீரராக அணியில் தொடரலாம் அல்லது ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டியில் இருந்தே ஓய்வு பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | IPL-ஐ தூக்கிச்சாப்பிடும் புதிய தொடர்... திட்டம் போடும் ஜெய்ஷா - என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News