IND vs AFG: டாஸ் வென்ற ஆப்கன்... இந்தியா மீண்டும் சேஸிங் - அஸ்வினுக்கு பதில் முக்கிய வீரர் சேர்ப்பு!

IND vs AFG: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 11, 2023, 02:07 PM IST
  • ஆப்கானிஸ்தானில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
  • இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம்
  • ஷமிக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பில்லை.
IND vs AFG: டாஸ் வென்ற ஆப்கன்... இந்தியா மீண்டும் சேஸிங் - அஸ்வினுக்கு பதில் முக்கிய வீரர் சேர்ப்பு!  title=

IND vs AFG: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் 9ஆவது லீக் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியின் டாஸ் மதியம் 1.30 மணிக்கு வீசப்பட்டது. 

போட்டியின் டாஸை வென்ற ஆப்கன் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த போட்டியிலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டாஸை இழந்தார், அந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைதான் தேர்வு செய்தது.  

ஆப்கானிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அஸ்வினுக்கு பதில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டார். இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷமி அணியில் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக பலராலும் கணிக்கப்பட்டது.

மேலும் படிக்க | கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல... உலகக் கோப்பையில் சுப்மன் கில் போல் அவதிப்படும் 6 வீரர்கள்!

ரோஹித் கூறியது என்ன?

மேலும் டாஸிற்கு பின் பேசிய ரோஹித், "நாங்கள் டாஸ் வென்றால் இரண்டாவது பேட்டிங் செய்ய நினைத்தோம். நேற்று மாலை பனியின் அளவைப் பார்த்தோம். ஆடுகளம் போட்டி போகப் போக அதிகம் மாறும் என்று நாங்கள் நினைவிக்கவில்லை. நன்றாக பந்துவீச வேண்டும், திரும்பி வந்து சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியின் ஒரு கட்டத்தில் நாங்கள் அழுத்தத்தில் இருந்தோம், ஆனால் கேஎல் ராகுல் மற்றும் கோலி நன்றாக பேட்டிங் செய்தார்கள், அவர்கள் அற்புதமானவர்கள், எங்கள் செயல்திறனில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இது எங்களுக்கு ஒரு நல்ல விளையாட்டாக இருந்தது, நாங்கள் அதை மீண்டும் தொடர்வோம். அஸ்வின் இந்த போட்டியில் விளையாடவில்லை, ஷர்துல் தாக்கூர் அவருக்கு பதில் வருகிறார்" என்றார்.

பிட்ச் எப்படி?

மேலும் இந்த ஆடுகளம் குறித்து கம்பீர் 'இது ஒரு அற்புதமான பிட்ச் போல் தெரிகிறது' என தனது கணிப்பை தெரிவித்தார். இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 230 ஆகும், ஆனால் தென்னாப்பிரிக்கா இலங்கைக்கு எதிராக 428 ரன்கள் எடுத்தது. மேலும், இந்த ஆடுகளம் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு கடினமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

பிளேயிங் லெவன்

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), நஜிபுல்லா சத்ரான், முகமது நபி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபரூஸ்ஹாக்.

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

மேலும் படிக்க | இந்திய அணிக்கு ஷாக்... வீடு திரும்பும் சுப்மான் கில் - பாகிஸ்தான் போட்டிக்கும் வாய்ப்பில்லை...?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News