ஸ்டார்க்கின் சேவை இந்த 5 அணிகளுக்கு தேவை... ஏலத்தில் அள்ளப்போவது யார்?

IPL Auction 2024: மிட்செல் ஸ்டார்க் வரும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உள்ள நிலையில், அவரை எடுக்க இந்த 5 அணிகள் கடும் போட்டியிடும் என தெரிகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 4, 2023, 10:00 AM IST
  • டிச. 19ஆம் தேதி அன்று ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது.
  • முதல்முறையாக துபாயில் நடைபெறுகிறது.
  • ஸ்டார்க் இந்த ஏலத்தில் ரூ.2 கோடி என அடிப்படை தொகையை நிர்ணயித்துள்ளார்.
ஸ்டார்க்கின் சேவை இந்த 5 அணிகளுக்கு தேவை... ஏலத்தில் அள்ளப்போவது யார்? title=

IPL Auction 2024: 17ஆவது ஐபிஎல் சீசன் தொடர் அடுத்தாண்டு கோடைக்காலத்தில் நடைபெற உள்ளது. வழக்கம்போல் 10 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், இந்த தொடருக்கான மினி ஏலம் வரும் டிச. 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. ஏலத்தை முன்னிட்டு பல்வேறு டிரேடிங் நடைபெற்றது. அதில் குறிப்பாக, குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். மேலும், கேம்ரூன் கிரீன் மும்பையில் இருந்து பெங்களூரு அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். 

இந்த டிரேடிங் வரும் டிச.12ஆம் தேதி வரை உள்ள நிலையில், ஏலத்திற்காக வீரர்களும் தங்களின் அடிப்படைத் தொகையை பதிவு செய்துள்ளனர். அதிலும் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் 7 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றனர். ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லீஸ், ஸ்டீவ் ஸ்மித், ஷேன் அபாட் ஆகியோர் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். இதில் ஹெட், இங்லிஸ், கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 

குறிப்பாக, இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஸ்டார்க் பல அணிகளுக்கு தேவையாக உள்ளார். பல அணிகள் தங்களின் வீரர்களை விடுவித்த நிலையில், இந்த 5 அணிகளுக்கு ஸ்டார்க்கின் சேவை முக்கிய தேவையாகும். ஸ்டார்க் 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் ஆர்சிபி அணிகளுக்காக விளையாடினார். 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் காயம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை. 2018இல் ரூ.9.40 கோடிக்கு கேகேஆர் வாங்கிய நிலையில், அவர் அந்த தொடரில் விளையாட இயலவில்லை. அதன்பின் அவர் தற்போதுதான் ஐபிஎல் தொடருக்கு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் குறிவைக்கும் இந்த 7 வீரர்கள்... ஏலத்திற்கு வெயிட்டிங்!

1. பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரபாடா, நாதன் எல்லிஸ், சாம் கரன் என மூன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் ஸ்டார்க்கை எடுக்க அவர்கள் முழு முயற்சியுடன் களமிறங்குவார்கள். அவர்களிடம் ரூ.29.1 கோடி ஏலத்தில் இருப்பதால் துணிந்து அவர்கள் ஸ்டார்க் எடுக்க முயற்சிப்பார்கள். ரபாடா மற்றும் ஸ்டார்க் உடன் அவர்கள் விளையாடினால் பந்துவீச்சு எந்தளவிற்கு வலுவாக இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.

2. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் ரூ.34 கோடி தொகையை வைத்துள்ளது. அவர்களிடமும் மார்க்ரம், கிளாசென், யான்சன், ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோரே பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள் என்பதால் ஸ்டார்க்கை எங்கு வைப்பது என நீங்கள் யோசிக்கலாம். யான்சனுக்கு பதில் ஸ்டார்க்கை அவர்கள் எடுத்தால் பந்துவீச்சு படையில் ஸ்டார்க், நடராஜன், புவனேஷ்வர் குமார் என்ற அணிவகுப்பை காணலாம். 

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தாவிடம் ரூ.32.7 கோடி  தொகை உள்ளது. அவர்கள் டிம் சௌதி மற்றும் லோக்கி பெர்குசன் ஆகியோரை ரிலீஸ் செய்துள்ள நிலையில், ஸ்டார்க்கை எடுக்க கேகேஆர் அதிகம் விரும்பும். கம்மின்ஸை எடுக்கவே கேகேஆர் ஆர்வங்காட்டும் என்றாலும் அவர்களின் லிஸ்டில் ஸ்டார்க் நிச்சயம் இருப்பார். 

4. மும்பை இந்தியன்ஸ் 

மும்பை இந்தியன்ஸில் ஏற்கெனவே பும்ரா மற்றும் பெஹன்டிராஃப் இருப்பதால் ஸ்டார்க்கின் தேவை என்னவென்றால், அவரின் அனுபவம்தான். ஆர்ச்சரின் இடத்தை மும்பை இந்தியன்ஸ் ஸ்டார்க்கை வைத்து நிரப்பிக்கொள்ளும்.

5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பெங்களூரு அணியின் பந்துவீச்சு படை என்பது தற்போது மிக மிக பலவீனமாக உள்ளது. ஹேசில்வுட் இல்லை, ஹர்ஷல் படேல் இல்லை, சுழற்பந்துவீச்சில் ஹசரங்கா இல்லை. எனவே, அவர்கள் தங்களின் பந்துவீச்சை வலுபடுத்த விரும்புவர். இதில் ஸ்டார்க் பொருத்தமாக இருப்பார். ஆனால், அதில் ஒரு சிக்கல் என்னவென்றால் ரூ.23.25 கோடி மட்டுமே ஆர்சிபியிடம் உள்ளது. 

மேலும் படிக்க | சிஎஸ்கே தூக்க நினைத்த பிளேயருக்கு ஸ்கெட்ச் போடும் மும்பை இந்தியன்ஸ்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News