IPL Auction 2024: ஐபிஎல் ஏலம் எங்கே, எப்போது, எப்படி பார்ப்பது?

IPL Auction 2024: ஐபிஎல் 2024ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் நாளை நடைபெற உள்ள நிலையில், அதில் எத்தனை பேர் ஏலம் விடப்பட உள்ளார்கள், அந்நிகழ்ச்சியை எப்போது, எங்கு, எப்படி பார்ப்பது என்பதை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 18, 2023, 03:54 PM IST
  • 2008ஆம் ஆண்டில் இருந்து ஏலம் நடைபெற்று வருகிறது.
  • 77 வீரர்கள் மொத்தம் நிரப்பப்பட உள்ளனர்.
  • மொத்தம் 333 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர்.
IPL Auction 2024: ஐபிஎல் ஏலம் எங்கே, எப்போது, எப்படி பார்ப்பது?  title=

IPL Auction 2024: ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலமும், ஒவ்வொரு ஆண்டு மினி ஏலமும் நடைபெறும். வீரர்களை தேர்வு செய்ய ஐபிஎல் தொடரில் இந்த ஏல முறை நடைபெறுகிறது. 2008ஆம் ஆண்டில் இருந்து இந்த முறை நடைபெற்று வருகிறது. புது அணிகள் தொடருக்குள் வரும்போது மட்டும் இந்த நடைமுறை மாறும். 

அந்த வகையில், 17ஆவது ஐபிஎல் (IPL 2024) அடுத்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரை முன்னிட்டு நடைபெறும் ஐபிஎல் ஏலம் நாளை (டிச.19) நடைபெறுகிறது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ள நிலையில், சுமார் 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 77 வீரர்கள் தேர்வாக உள்ளனர். மொத்தம் 333 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். அதில் 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் அடக்கம்.

IPL Auction 2024: எந்த அணி எவ்வளவு வைத்துள்ளது?

தொடர்ந்து நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு 8 இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. கையில் ரூ.31.4 கோடியை வைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 11 இடங்களை நிரப்ப வேண்டும், அவர்களிடம் ரூ.17.75 கோடியை வைத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) அணிக்கும் 11 இடங்களை நிரப்ப, ரூ.23.25 கோடியை வைத்துள்ளது. அதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) அணியும் 11 வீரர்களை நிரப்ப, ரூ.28.95 கோடியை பர்ஸில் வைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணி 9 வீரர்களை நிரப்ப ரூ.14.5 கோடியை வைத்திருக்கிறது. 

மேலும் படிக்க | IPL Auction 2024: ஐபிஎல் ஏலத்தில் ஜாக்பாட் யாருக்கு? கம்மின்ஸ், ப்ரூக் என நீளும் பட்டியல்

கடந்த சீசனில் இரண்டாம் இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) 8 வீரர்களை நிரப்ப ரூ.38.15 கோடியை வைத்துள்ளது. ஏலத்தில் அதிக தொகை வைத்திருக்கும் அணியே இதுதான். லக்னோ அணி (Lucknow Super Giants) நிரப்ப 8 வீரர்களை ரூ.13.15 கோடியை வைத்திருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) 6 வீரர்களை நிரப்ப  ரூ.34 கோடியை வைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) 8 வீரர்களை நிரப்ப ரூ.32.7 கோடியையும், பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) 5 வீரர்களை நிரப்ப ரூ.29.1 கோடியை கையில் வைத்துள்ளது. 

IPL Auction 2024: எப்போது, எங்கு பார்ப்பது?

ஐபிஎல் மினி ஏலம் துபாய் கோகோ கோலா எரினா பகுதியில் நாளை (டிச. 19) நடைபெற உள்ளது. முதல்முறையாக இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி ஏலம் மதியம் 1 மணிக்கு தொடங்கும் என தெரிகிறது. இந்த ஏலத்தை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) சேனலிலும், ஓடிடியில் ஜியோ சினிமா (JioCinema) தளத்திலும் இலவசமாக காணலாம்.

டிராவிஸ் ஹெட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கோட்ஸி, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் மீதும், ஷாருக் கான், ஷர்துல் தாக்கூர், ஹர்ஷல் படேல், மனீஷ் பாண்டே, உமேஷ் யாதவ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் மீதும் அதிக கவனம் இருக்கும் எனலாம். அதிக தொகை வைத்துள்ள குஜராத், ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட அணிகள் நட்சத்திர வீரர்களை நாளை அள்ளிப்போடும் என எதிர்பார்க்கலாம். 

மேலும் படிக்க | மும்பை அணியில் இருந்து வெளியேறினாரா சச்சின்...? உண்மை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News