T20 worldcup:மும்பை இந்தியன்ஸூன்னு நினைச்சு இந்திய அணியை அடி வெளுத்த பட்லர்

20 ஓவர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸூன்னு நினைச்சு, ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இந்திய அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்துவிட்டனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 10, 2022, 05:22 PM IST
  • இந்திய அணி பரிதாப தோல்வி
  • விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து வெற்றி
  • ஜாஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் சம்பவம்
T20 worldcup:மும்பை இந்தியன்ஸூன்னு நினைச்சு இந்திய அணியை அடி வெளுத்த பட்லர் title=

ஓப்பனிங் படுமோசம்

20 ஓவர் உலக கோப்பையின் 2வது அரையிறுதிப் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் களமிறங்கியது. தொடரின் தொடக்கம் முதலே இந்திய அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் படுமோசமாக இருந்த நிலையில், இந்த போட்டியிலாவது சிறப்பாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆம்.., ராகுல் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரோகித் ஒருநாள் போட்டி விளையாடுவது போல் ஒருமுனையில் விளையாடி 28 பந்துகளுக்கு 27 ரன்கள் எடுத்துவிட்டு ஆட்டமிழந்தார். 

ஹர்திக் பாண்டியா அதிரடி

வழக்கம்போல் கோலி மீது அழுத்தம் அதிகரிக்க, நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் 40 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடினார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், 33 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். அவரின் ஆட்டத்தினால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 168 ரன்கள் எடுத்தது.

மேலும் படிக்க | IND vs ENG Semifinal: மழை வந்தால் இந்தியா பைனலுக்கு தகுதியா?

பட்லர் - ஹேல்ஸ் அபாரம்

ஆரம்பத்தில் இந்த ஸ்கோர் சூப்பரான ஒன்றாக தெரிந்தாலும், பட்லர் - ஹேல்ஸ் கூட்டணி அந்த எண்ணத்தை 6 ஓவரில் அடியோடு மாற்றிவிட்டனர். பவர்பிளேவில் மட்டும் விக்கெட் இல்லாமல் 63 ரன்களுக்கும் மேல் எடுத்துவிட்டனர். இது அந்த அணிக்கு மிகபெரிய பாசிடிவ் அணுகுமுறையாக அமைந்தது. அடுத்தடுத்த ஓவர்களிலாவது விக்கெட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்த்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

இந்திய அணி படுதோல்வி

நங்கூரம் போல் கூட்டணி அமைத்துக் கொண்ட இருவரும் இந்திய அணி பந்துவீச்சை புரட்டி எடுத்தனர். பந்துகளை எல்லாம் வாணவேடிக்கைகளாக பறக்கவிட்டு, 168 ரன் இலக்கை எளிதாக சேஸ் செய்தனர். கடைசி வரை விக்கெட் இழக்காத இங்கிலாந்து அணி, இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கம்பீரமாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பட்லர் 80 ரன்களும், ஹேல்ஸ் 86 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 

பட்லரை பொறுத்த வரை ஐபிஎல் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதேபோல் தான் இன்றும் அவர் ஆடியதால், மும்பை இந்தியன்ஸூன்னு நினைத்து அவர் இந்திய அணியை அடி வெளுத்துவிட்டதாக நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.

மேலும் படிக்க | Haris Rauf: ஹரீஸ் ரவூஃப் பிறந்த நாளில் பிராங் செய்த ஷாகீன் அப்ரிடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News