CSK வெற்றி பெற 171 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது!

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறும் IPL லீக் 15-வது போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்துள்ளது!

Last Updated : Apr 3, 2019, 09:59 PM IST
CSK வெற்றி பெற 171 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது! title=

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறும் IPL லீக் 15-வது போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்துள்ளது!

IPL 2019 தொடரின் 15-வது லீக் ஆட்டம் இன்று மும்பை வாங்கேட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

IPL 2019 லீக் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் வெற்றிப்பெற்று 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் சென்னை அணியும், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் வெற்றியை மட்டுமே குறிவைத்து இன்றைய போட்டியில் களம்காண்டுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. மும்பை அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டீ காக் 4(7) ரன்களில் வெளியேற, இவரைத்தொடர்ந்து ரோகித் ஷர்மா 13(18) ரன்களில் வெளியேறினார். மும்பை அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 59(43) மற்றும் குர்ணல் பாண்டையா 42(32) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 171 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

Trending News