IPL Mini Auction : சென்னை சூப்பர் கிங்ஸ் மிரட்டப்போகிறதா... மிக்சர் சாப்பிடப்போகிறதா? - முழு பிளான்!

IPL Mini Auction : ஐபிஎல் மினி ஏலம் இன்று நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளான் குறித்த தொகுப்பை இதில் காணலாம்.   

Written by - Sudharsan G | Last Updated : Dec 23, 2022, 07:48 AM IST
  • மினி ஏலம் கொச்சியில் மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
  • மொத்தம் 87 வீரர்கள் தேவைப்படுகிறார்கள்.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 7 வீரர்கள் தேவை.
IPL Mini Auction : சென்னை சூப்பர் கிங்ஸ் மிரட்டப்போகிறதா... மிக்சர் சாப்பிடப்போகிறதா? - முழு பிளான்! title=

IPL Mini Auction : ஐபிஎல் தொடரில் இதுவரை 15 சீசன் நடைபெற்றுள்ளது. இதில், 13 சீசனை விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கிறது. 13 சீசனில் 11 முறை பிளே ஆப் சுற்று இருக்கிறது. இது எல்லாம் பழைய கதை. இந்த பழம்பெரும் கதைகளின் ஒற்றை நாயகனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி என்பதை மறுக்க முடியாது. அப்படி பார்க்கும்போது, தோனியின் கடைசி தொடர் இதுதான். An End of the Era. 

ஒரு வீரராக தோனிக்கு இது கடைசி சீசனாக அமைய வாய்ப்புள்ளதால், அடுத்தடுத்த சீசன்களிலும் மேற்கண்ட அந்த பழம்பெருமைகளை சுமந்து செல்ல பலம் வாய்ந்த உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் தோனி தற்போது இருக்கிறார். அனைவருக்கும் இந்தாண்டு தோனி கோப்பை வெல்ல வேண்டும் என நினைத்திருப்போம். ஆனால், அவர் சிந்தனையில் அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோப்பைகளாவது சென்னை சூப்பர் கிங்ஸ் பெயரில் இருக்க வேண்டும் என யோசித்து வைத்திருப்பார். 

சென்னைக்கு இன்னும்  வெளிநாட்டு வீரர்கள் உள்பட 7 வீரர்களின் இடத்தை நிரப்ப வேண்டும். எனவே, தோனி எதிர்பார்க்கும் ஸ்பார்க் உள்ளவர்களை இந்த ஏலத்தில் அள்ளிப்போட்டு, மீண்டும் அந்த Core-ஐ வலுவாக்க நினைப்பார். அந்த வகையில், தோனி அணி வாங்க நினைக்கும் வீரர்கள், வேறு வார்த்தையில் சொல்வதென்றால் சிஎஸ்கே அணிக்கு தேவைப்படும், முதல் 3 வீரர்களின் விவரங்களை இங்க காணலாம். 

மேலும் படிக்க | IPL Auction 2023: நாள், நேரம், இடம், ஒளிப்பரப்பும் சேனல், வீரர்கள் பட்டியல் -முழு விவரம்

வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்

சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், கேம்ரூன் கிரீன் இவர்களில் யாரையாவது ஒருவரை டூவைன் பிராவோவை ஈடுகட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் எடுக்க நினைக்கும். ஆனால், மூன்று பேரும் அனைத்து அணிகளின் விருப்பப் பட்டியிலில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. குறிப்பாக, அதிக தொகையை வைத்திருக்கும் ஹைதராபாத், பஞ்சாப் அணிகளுக்கு. எனவே, இந்த மூன்று வீரர்களுக்கு போகாமல் சிஎஸ்கே மற்றொரு இங்கிலாந்து வீரரான ஹேரி ப்ரூக்ஸ் இடம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அவர் பிராவோ போன்று ஆல்-ரவுண்டிங் வேகப்பந்துவீச்சாளர் இல்லையென்றாலும் அவரின் மிரட்டலான மிடில் ஆர்டர் ஆட்டமும், துணைக்கண்டத்திற்கான சிக்கனம் நிறைந்த சூழலும் பெரிய அளவில் கைக்கொடுக்கும். இருப்பினும், மொயின் அலி, தீக்ஷனா என இரண்டு சூழல் பந்துவீச்சாளர்கள் இருக்கையில், இவரை எடுப்பது சற்று பின்னடைவை உண்டாக்கலாம். இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், 24 வயதான ஹாரி ப்ரூக் இரண்டாவது வீரராக இன்று ஏலம் விடப்பட உள்ளார். 

ப்ரூக் தேவையில்லை, எங்களுக்கு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் தான் வேண்டுமென்றால் ஜேஸ்சன் ஹோல்டர், ஜிம்மி நீஷம், இலங்கை டி20 அணியின் கேப்டன் தசுன் ஷனகா ஆகியோர் வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்களில் ஹோல்டர் முதல் ஆல்-ரவுண்டிங் ஸ்லாட்டிலும், மற்றவர்கள் இரண்டாவது ஸ்லாட்டிலும் இடம்பெற்றிருக்கிறது. 

விக்கெட் கீப்பிங் பேட்டர்

ஆல்-ரவுண்டர் இடத்திற்கு பின் சிஎஸ்கே அணிக்கு முக்கிய தேவை விக்கெட் கீப்பிங் பேட்டர். முன்னர் சொன்னதுபோன்று அடுத்து  தொடரில் தோனி ஓய்வுபெற போகிறார். கேப்டனாக அவரை நிரப்ப ஒருவர் வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, விக்கெட் கீப்பிங் பேட்டிங் அதுவும் பினிஷிங் ரோல் என்றால் கூடுதல் சிறப்பு. அதற்கான, வீரர்கள் என்றால் நிக்கோலஸ் பூரன் - லிட்டன் தாஸ் - பில் சால்ட். இவர்கள் அனைவரும் வெளிநாட்டு வீரர்கள் என்பதால் இந்திய வீரர்களான நாராயணன் ஜெகதீசன், பாபா இந்திரஜித், கேஎஸ் பரத், முகமது அசாரூதின். ஜெகதீசனை வெளியே விட்டிருந்தாலும் மீண்டும் எடுக்கவும் சிறு வாய்ப்புள்ளது. இதை தவிர்த்து மணீஷ் பாண்டே, மயங்க் அகர்வால் செல்லவும் சிறு வாய்ப்புள்ளது, 

இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள்

இதையடுத்து, முக்கியமாக ஓர் இந்திய வேகப்பந்துவீச்சாளர். இஷாந்த் சர்மா, ஜெயதேவ் உனத்கட், ஷிவம் மவி, சந்தீப் ஷர்மா  உள்ளிட்டவர்கள் கண்டிப்பாக ஷாய்ஸில் இருப்பார்கள். 

ஒரு வியாபாரத்தில் சொல்வது போன்று, Demand and Supply என்பது இந்த ஏலத்தில் முக்கியமான ஒன்று. சிஎஸ்கே அணிக்கு Demand ஓரளவு இருந்தாலும், அதற்கான Supply சற்று குறைவுதான். குறிப்பாக, தேவைக்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் சற்று குறைவாகதான் இருக்கிறது என்பதே நிதர்சனம். இத்தனை கேள்விகளுக்கான அனைத்து பதில்களும் ஏலம் ஆரம்பித்து முதலிரண்டு ஸ்லாட்கள் முடிந்த பின்னரே கிடைத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மினி ஏலம்: தமிழக வீரர்களுக்கு முன்னுரிமை! சிஎஸ்கே லிஸ்ட்டில் 5 தமிழர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News