IPL 2021: நடிகை ஊர்வசி ரவுடேலாவை ட்ரோல் செய்யும் ரிஷப் பந்த் ரசிகர்கள்

டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் இருந்து விலகியிருக்குமாறு அவரது ரசிகர்கள், நடிகை ஊர்வசி ரவுடேலாவுக்கு சொல்லும் டிவிட்டர் பதிவுகள் வைரலாகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 6, 2021, 09:52 PM IST
  • டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்தின் பிறந்தநாள் அக்டோபர் 4
  • அவரது முன்னாள் தோழி அடுத்த நாள் வாழ்த்தினார்
  • விலகியிரு என ரிஷப்பின் முன்னாள் தோழியை நக்கலடிக்கும் நெட்டிசன்கள்
IPL 2021: நடிகை ஊர்வசி ரவுடேலாவை ட்ரோல் செய்யும் ரிஷப் பந்த் ரசிகர்கள்  title=
டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் இருந்து விலகியிருக்குமாறு அவரது ரசிகர்கள், நடிகை ஊர்வசி ரவுடேலாவுக்கு சொல்லும் டிவிட்டர் பதிவுகள் வைரலாகின்றன.
2018 ஆம் ஆண்டில்  இளம் கிரிக்கெட் வீர்ர் ரிஷப் பந்துடன் நடிகை ஊர்வசி ரவுடேலா டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது. இருப்பினும், அவர்கள் தங்கள் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பததற்கு முன், இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். ரிஷப் பந்த் வாட்ஸ்அப்பில் நடிகையை தடுத்ததாக கூறப்படுகிறது.
 
டீம் இந்தியா விக்கெட் கீப்பர்-பேட்டர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இரு தின்ங்களுக்கு முன்னதாக அக்டோபர் 4, 2021 அன்று தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தற்போது ஐபிஎல் 2021 போட்டித்தொடரில் டெல்லி தலைநகரை வழிநடத்துவதில் பிஸியாக இருக்கும் இளைஞருக்கு நெட்டிசன்கள் இதயப்பூர்வமான ட்வீட்களை அனுப்பினர்.
சுவாரஸ்யமாக, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவும் ட்விட்டரில் பந்துக்கு சிறப்பு நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார், ஆனால் வாழ்த்தை ஒரு நாள் தாமதமாக அக்டோபர் 5ம் தேதியன்று வாழ்த்து தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
 
அதுமட்டுமல்ல, ஊர்வசியின் பிறந்தநாள் ட்வீட் மீண்டும் கிரிக்கெட்டர் ரிஷப் பந்துடன் அவர் டேட்டிங் செய்வதான வதந்திகளை தூண்டியது.  
 நடிகை ஊர்வசிக்கும் ரிஷப் பந்திற்கும் இடையிலான டேட்டிங் வதந்திகளுக்கு மத்தியில் ரிஷப் பந்த் டேராடூனைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மற்றும் அலங்கார வடிவமைப்பாளர் ஈஷா நேகியுடனான தனது உறவை உறுதிப்படுத்தினார்.

ஊர்வசியின் தாமதமான ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ட்வீட்டிற்காக ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். ரிஷப் பந்த், ஊர்வசியின் வாட்ஸ் அப்பை ப்ளாக் செய்துவிட்டதால் பொறுத்துப் பார்த்த ஊர்வசி டிவிட்டரில் வாழ்த்து தெரிவிப்பதாகவும் கிண்டல் அடிக்கின்றனர். அதுமட்டுமல்ல, டிசி கேப்டனிடம் இருந்து விலகி இருக்கச் சொல்லி ரசிகர்கள் ஊர்வசியை ட்ரோல் செய்கின்றனர்.

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி சிறந்த நிலையில் இருக்கிறது. ஏற்கனவே ஐபிஎல் 2021 பிளேஆஃப் சுற்றில் நுழைந்த டெல்லி அணி, கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்தது. தற்போது புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ், தனது கடைசி ஆட்டத்தில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்தது.
 
ரிஷப் பந்தின் ஐபிஎல் அணி அக்டோபர் 8 ஆம் தேதி இறுதி லீக்-நிலை போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

Read Also | எனது கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில் தான் இருக்கும்: தோனி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News