ஐபிஎல் சான்ஸ் கொடுக்கிறேன் என தோனி சொன்னதை மதிக்காத ஆப்கானிஸ்தான் வீரர்

உடல் பருமனான ஷேசாத், ஐபிஎல்-ல் விளையாட வாய்ப்பு கொடுப்பதாக தோனி தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் 20 கிலோ எடையை குறைக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 9, 2023, 02:49 PM IST
  • ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு
  • தோனி சொன்ன அட்வைஸ் நிராகரிப்பு
  • ஜாக்பாட்டை மிஸ் செய்த ஆப்கானிஸ்தான் வீரர்
ஐபிஎல் சான்ஸ் கொடுக்கிறேன் என தோனி சொன்னதை மதிக்காத ஆப்கானிஸ்தான் வீரர் title=

உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான எம்.எஸ். தோனி, உடல் கட்டுக்கோப்பு மற்றும் பீல்டிங் ஆகியவற்றில் கறாராக இருப்பவர். இந்த இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தாத வீரர்களை தோனி அணியில் சேர்த்துக் கொள்வதில்லை. அதேபோல், ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரராக இருந்த முகமது ஷேசாத், உடல் பருமனாக காணப்பட்டார். சிக்ஸ் அடிப்பதில் வல்லவர் என்றாலும், ஓடி ரன்கள் எடுக்க முடியாதவர். இருப்பினும், தனது அதிரடி ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அளவில் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர்.

மேலும் படிக்க | ’வார்னர் ஒரு ஹீரோ’ மிட்செல் ஜான்சனுக்கு பதிலடி கொடுத்த ஆஸி கேப்டன் கம்மின்ஸ்

2018-ம் ஆண்டு இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆசியக் கோப்பை போட்டியின்போது, அப்போதைய ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கன், எம்.எஸ். தோனியிடம் பேசினார். அப்போது, ஷேசாத் குறித்து பேசிய அஸ்கர் ஆப்கன், ஷேசாத் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தோனி, ஷேசாத் மிகப்பெரிய பானை வைத்திருக்கிறார். அவர் 20 கிலோ எடையை குறைத்தால், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரை எடுத்துக் கொள்வேன் எனக் கூறினார்.

ஆனால், ஷேசாத் மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்கு திரும்பும்போது, 5 கிலோ எடை அதிகரித்திருந்தார். இதனால், ஐ.பி.எல்.-ல் ஷேசாத் விளையாட முடியாமல் போனது. ஆனால், ஷேசாத் தனது அதிரடி ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அளவில் பங்களித்தார். 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில், ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாட, அதற்கு முகமது ஷேசாத்தின் அதிரடி ஆட்டம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

ஐபிஎல் போட்டிகளில் அதுவும் தோனி தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்கு உலகம் முழுவதும் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் ஏராளமானோர் வாழ்நாள் கனவுடன் காத்திருக்கின்றனர். ஆனால் தோனியே ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறியும் அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்திருக்கிறார் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷேஷாத்.  அத்துடன் அவருக்கு இப்போது ஆப்கானிஸ்தான் அணியிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை தோனியின் அறிவுரையை பின்பற்றி உடல் எடையை குறைத்திருந்தால் இப்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலாவது ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது ஷேஷாத் தொடர்ந்து விளையாடியிருக்கலாம்.

மேலும் படிக்க | IPL 2024 Auction: பென் ஸ்டோக்ஸின் இடத்தை நிரப்ப CSK டார்கெட் செய்யப்போகும் 5 வீரர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News