கொல்கத்தா அணிக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமனம்

தமிழக வீரர் அஸ்வினை தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக தமிழக வீரர் தினேஷ் நியமனம்

Last Updated : Mar 4, 2018, 10:44 AM IST
கொல்கத்தா அணிக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமனம் title=

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் தேர்வு நடந்து முடிந்துள்ளது. 

சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களமிறங்குகின்றன. தமிழக வீரர் அஸ்வினை தக்கவைத்துக்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயற்ச்சி செய்தும், அவரை தக்க வைக்க முடியவில்லை. ரூ 7.6 கோடி விலை கொடுத்துக் அஸ்வினை நடிகை பிரித்தி ஜிந்தா சக உரிமையாளராக உள்ள பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. மேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தமிழக வீரர் அஸ்வினை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக யார் கேப்டனாக பணியாற்ற போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

 

 

Trending News