IPL 2021: CSK அணியின் உருக்கமான வீடியோ, சோகத்தில் ரசிகர்கள்!

இந்த வீடியோவில், கேப்டன் எம்.எஸ். தோனி (MS Dhoni) சென்னையை அடைந்து முகாமில் எவ்வாறு பயிற்சியைத் தொடங்கினார் என்பதை IPL 2021 இன் மறுபதிப்பு காட்டப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 12, 2021, 12:02 PM IST
IPL 2021: CSK அணியின் உருக்கமான வீடியோ, சோகத்தில் ரசிகர்கள்! title=

புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல் 2021) 14வது சீசன் கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் நடைபெற்றது. இந்த தொடரில் கலந்து கொண்ட சில வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

ஐபிஎல் 2021 இல் (IPL 2021) மிகவும் பாதுகாப்பாக போடப்பட்டிருந்த பயோ பபுளை (Bio Bubble) மீறி கொரோனா வைரஸ் (Coronavirus) உள் நுழைந்தது. இதன் பின்னர், பிசிசிஐ (BCCI) போட்டியை காலவரையின்றி ஒத்திவைத்தது. 14 வது சீசன் ஒத்திவைக்கப்பட்டதால் கிரிக்கெட் ரசிகர்கள் நிறைய துக்கம் அடைந்தனர்.

ALSO READ | கொரோனா உறுதியானால் இங்கிலாந்து சுற்றுப் பயணம் கிடையாது, BCCI கடும் எச்சரிக்கை

உருக்கமான வீடியோவை வெளியிட்டது CSK
ஐபிஎல் 2021 (IPL 2021) தொடர்களில் 3 முறை சாம்பியன் பட்டத்தை சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), இந்தாண்டு நடந்த தொடரில் மறக்க முடியாத சில தருணங்களை வீடியோ வடிவில் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் “நாங்க திரும்பி வருவோம்” என்று பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ பதிவிற்கு, கிரிக்கெட் ரசிகர்கள் தங்களின் அன்பு மழையை பொழிந்து வருவதோடு, தங்களின் நெகிழ்ச்சியான கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

 

 

 

கடந்த ஆண்டு நடந்த தொடரில் பிளே- ஆஃப் சுற்றோடு வீடு திரும்பிய சென்னை அணி, இந்தாண்டுக்கான தொடரில் 10 புள்ளிகளை பெற்று 2ம் இடத்தில இருந்தது. மேலும் நடந்த 7 போட்டிகளில் 5ல் வெற்றியை பெற்று இருந்தது. 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News