யூரோ கோப்பை 2016: உக்ரைனை ஜெர்மனி வீழ்த்தியது 2-0

Last Updated : Jun 14, 2016, 01:51 PM IST
யூரோ கோப்பை 2016: உக்ரைனை ஜெர்மனி வீழ்த்தியது 2-0 title=

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் உலக சாம்பியனான ஜெர்மனி, உக்ரைன் அணியுடன் மோதியது.

ஆட்டம் தொடங்கியது முதலே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. 19-வது நிமிடத்தில் ப்ரீ கிக் மூலம் ஜெர்மனியின் டோனி க்ரூஸ் தூக்கி அடித்த பந்தை தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்தார் முஷ்டாபி. சர்வதேச போட்டியில் இது அவருக்கு முதல் கோலாமாக அமைந்தது. இந்த கோல் மூலம் ஜெர்மனி அணி முதல் பாதியில் 1-0 என முன்னிலைப் பெற்றது. இரண்டாவது பாதியிலும் ஜெர்மனியின் ஆதிக்கமே தொடர்ந்தது. பதில் கோல் திருப்ப உக்ரைன் வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.

90 நிமிடங்கள் முடிந்ததும் கூடுதலாக வழங்கப்பட்ட 2 நிமிடங்களில், சச்வெய்ன்ஸ்டெய்ஜர் அபாரமாக கோல் அடிக்க 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது. ஜெர்மனி 3 புள்ளிகளுடன் சி பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

Trending News