IND vs ENG Test Series: இவர் லிஸ்டிலேயே இல்லையே... விராட் கோலிக்கு மாற்று வீரர் இவர்தான் - காரணம் என்ன?

Virat Kohli Replacement in IND vs ENG Test Series: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில், அவருக்கான மாற்று வீரர் குறித்து மூத்த வீரர் ஆகாஷ் சோப்ரா சில பரிந்துரைகளை தெரிவித்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 23, 2024, 10:13 AM IST
  • தனிப்பட்ட காரணங்களுக்காக 2 போட்டிகளில் இருந்து விலகல்
  • மாற்று வீரரை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை.
  • முதல் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது.
IND vs ENG Test Series: இவர் லிஸ்டிலேயே இல்லையே... விராட் கோலிக்கு மாற்று வீரர் இவர்தான் - காரணம் என்ன? title=

Team India, Virat Kohli Replacement in IND vs ENG Test Series: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் (IND vs ENG Test Series) வரும் ஜன.25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் தொடங்க உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் மார்ச் மாத முதல் வாரத்தில் நிறைவடையும். இதன்பின்னரே, ஐபிஎல் தொடர் (IPL 2024) தொடங்கும் எனலாம். இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் ஐபிஎல் தொடர் முழுமையாக இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வியும் உள்ளது. 

ஐபிஎல் தொடர் ஒருபுறம் இருக்க, வரும் டி20 உலகக் கோப்பை வரை (ஜூலை வரை) இந்திய அணி விளையாடப்போகும் கடைசி டெஸ்ட் தொடர் இது என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. 

மாற்று வீரர் யார்?

அந்த வகையில், இங்கிலாந்து தொடரில் விராட் கோலிக்கு மாற்று வீரரை (Virat Kohli Replacement) விரைவில் அறிவிக்கும் என பிசிசிஐ நேற்றைய அறிவிப்பில் தெரிவித்திருந்தது. இருப்பினும், இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், விராட் கோலி மிடில் ஆர்டரில் வலுவான வீரராக இருந்த நிலையில், அவரை ஒத்த வீரர்களை இணங்காணுவது அவ்வளவு எளிதல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. 

மீண்டும் புஜாரா அல்லது ரஹானேவுக்கு வாய்ப்பளிக்கப்படுமா இல்லையெனில் சர்ஃபராஸ் கான், அபிமன்யூ ஈஸ்வரன், ரின்கு சிங், ரஜத் பட்டிதார் (Rajat Patidar) ஆகியோரில் ஒருவருக்கு இந்திய அணி வாய்ப்பளிக்குமா என பலரும் தங்களின் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | விராட் கோலி விட்டுச்சென்ற வெற்றிடம்... நிரப்ப போகும் மாற்று வீரர் இவர்களில் யார்?

ஏன் படிக்கலை எடுக்கக் கூடாது?

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்டர் ஆகோஷ் சோப்ரா (Aakash Chopra) கூறுகையில்,"நான் ஒரு இடது கை ஆட்டக்காரரை முன்வைக்கிறேன் - தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal). அவர் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்று நான் சொல்கிறேன். ஆனால் அவர் சிறப்பாக பேட்டிங் செய்வதால் அவர் இப்போது தற்போதே இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும். அவர் சமீபத்தில் இரட்டை சதத்தை தவறவிட்டார். அவர் வேறு லெவலில் பேட்டிங் செய்கிறார். அவர் பேட்டிங்கின் எந்த இடத்தில் இறங்கினாலும் ரன்களை குவிக்கிறார்.

அவர் ஒரு சிறப்பான வீரர், சுழற்பந்துவீச்சு மற்றும் வேகப்பந்து சிறப்பாக விளையாடுகிறார். அவர் மூன்று வடிவத்திற்குமான வீரராக உள்ளார். கடந்த ஐபிஎல் தொடருக்கு முன்பு ஒன்றரை ஆண்டுகளாக அவர் நல்ல ஃபார்மில் இல்லை. பிறகு, தற்போது 2023 ஐபிஎல் (IPL 2023) தொடருக்கு பின் அவர் ரன்கள் குவிக்காத இடமே இல்லை. அப்படியானால் ஏன் தேவ்தத் படிக்கலை எடுக்கக் கூடாது?.

ரஜத் படிதரும்...

ரஜத் படிதாரின் ஆட்டங்கள் அற்புதமானவை. காயம் காரணமாக இடையிடையே ஐபிஎல் தொடரை அவர் தவறவிட்டார், ஆனால் அதன்பிறகு, அவர் திரும்பி வந்து ரன்கள் குவித்தார். சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடினார்.

நிறைய பேர் இவரை ஐபிஎல் தொடரில் மட்டுமே பார்த்திருப்பார்கள், அதனால் ஐபிஎல் கோணத்தில் பார்க்கிறார்கள். ஆனால் ஐபிஎல் போட்டிகளையும் தவிர்த்து பார்க்க வேண்டும். இவர் முதல்தர கிரிக்கெட் ஸ்டைலில் விளையாடுகிறார். அதனால் ரஜத் படிதாரையும் பரிந்துரைப்பேன். என் மனதில், ஒரு மிடில் ஆர்டர் பேட்டர் இங்கே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தோன்றுகிறது" என்றார். 

குறிப்பாக, ரோஹித் - ஜெய்ஸ்வால் - கில் - ஷ்ரேயாஸ் - கேஎல் ராகுல் - அஸ்வின் - ஜடேஜா என பேட்டிங் ஓரளவுக்கு பலமாக இருந்தாலும், இரண்டு ஸ்பின்னர், மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் போகும்பட்சத்தில் இந்தியாவுக்கு மிடிலில் ஒரு பேட்டர் கிடைத்தால் நன்றாக இருக்கும். அக்சர் படேல் நல்ல ஆல்ரவுண்டர்தான் என்றாலும் ஒரு பேட்டர் மிடில் ஆர்டரில் சேர்ந்துகொண்டால் பேட்டிங்கும் வலுபெறும். மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்படும்பட்சத்தில் பழைய பார்முலாவே போதுமானது. 

மேலும் படிக்க | Suryakumar Yadav: ஐசிசி 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 அணியில் இடம் பிடித்த நான்கு வீரர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News