நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளை விளையாட உள்ளது. அதன் முதல் டி20 போட்டி, இன்று வெல்லிங்டனில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கும் இப்போட்டி, அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தியாவில் தூர்தர்ஷன் சேனலிலும் ஒளிப்பரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் போதே இந்த தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு டி20யில் ஹர்திக் பாண்டியாவையும், ஒருநாள் தொடரில் ஷிகர் தவானையும் கேப்டனாக பிசிசிஐ நியமித்திருந்தது.
ஷிகர் தவான் ஒருநாள் அரங்கில் பல்வேறு போட்டிகளுக்கு இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். மறுபக்கம், ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் முதல்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்று, குஜராத் டைட்டன்ஸ் அணியை சாம்பியனாகினார். இதனால், இவருக்கு இந்திய அணியை தலைமையேற்பதில் சிக்கல் இருக்க வாய்ப்பு குறைவு.
மேலும் படிக்க | இந்தியா - நியூசிலாந்து போட்டியை லைவ்வாக பார்ப்பது எப்படி?
நடந்து முடிந்த உலகக்கோப்பையில், இந்திய படுதோல்வி அடைந்ததை அடுத்த, டி20க்கா வருங்கால வீரர்களை கட்டமைக்கும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியிருக்கிறது. அதில், ஹர்திக்கை கேப்டனாக நியமிப்பது முதல் அடியாக பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையில் பல்வேறு இளம் வீரர்கள் இந்திய டி20 அணிக்கு புதுரத்தம் பாய்ச்சுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனியர் வீரர்களுக்கு மட்டுமின்றி, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் விவிஎஸ் லக்ஷ்மண் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இந்தியா பயமின்றி துணிச்சலாக ஆடும் அணுகமுறையை கைக்கொள்ள வேண்டும் என இவர் கூறியிருந்தார்.
அந்த வகையில், ஹர்திக் பாண்டியா, தனது குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா உடன் இருக்கும் புகைப்படத்தை நேற்று வெளியிட்டார். அதாவது, வர்ணனையாளராக நியூசிலாந்து வந்துள்ள ஆஷிஷ் நெஹ்ரா, ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். அதில், இந்திய அணியின் மூத்த வீரரும், வர்ணனையாளருமான அஜய் ஜடேஜாவும் உள்ளார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பாண்டியா பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ரோகித் சர்மாவிடம் வித்தையை கற்று அவருக்கே ஆப்பு வைக்க ரெடியான இளம் வீரர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ