மும்பை இந்தியன்ஸை ஹர்திக் பாண்டியா வாங்கியது ஏன்? வெளியான உண்மை காரணம்

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை மீண்டும் குஜராத் அணியிடம் இருந்து வாங்கியது ஏன் என்ற காரணத்தை அந்த அணியின் முன்னாள் அனலிஸ்ட் ஹரிசங்கர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 5, 2023, 01:11 PM IST
  • மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா
  • குஜராத் அணியில் இருந்து வெளியேறியது ஏன்?
  • மும்பை முன்னாள் அனலிஸ்ட் சொல்லும் காரணம்
மும்பை இந்தியன்ஸை ஹர்திக் பாண்டியா வாங்கியது ஏன்? வெளியான உண்மை காரணம் title=

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2024 சீசனுக்கு முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) வர்த்தகம் செய்திருக்கிறது. இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஐபிஎல் லீக் வரலாற்றில் இது மிகப்பெரிய வர்த்தகமாக இருந்தது. ஏனெனில் MI-க்கு அவர்களின் அணியில் இல்லாத ஒரே பொக்கிஷம் கிடைத்தது. ஹர்திக் பாண்டியா வருகைக்குப் பிறகு இப்போது ஒரு வலிமையான யூனிட் மும்பை இந்தியன்ஸிடம் உள்ளது. இதன்பின்னணியில் இருப்பது அனைத்தும் பணம் தான். ஐந்து முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸூக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற உண்மையான வர்த்தகம் தொடர்பான சீக்ரெட்ஸ் யாருக்கும் தெரியாது.

மேலும் படிக்க | புதிய கேப்டன்... மூத்த வீரர்களுக்கு ஓய்வு... இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா புது பிளான்!

வெளியில் கூறப்படுவதை விட இரண்டு மடங்கு தொகை அல்லது அதற்கு ஈடான வேறு தொழில் ஒப்பந்தங்கள் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றிருக்கும் என்பது தான் பலரின் கணிப்பு. ஹர்திக் ஜிடியின் முகமாக இருந்ததார். குஜராத் டைட்டன்ஸ் அணி தோன்றிய இரண்டு ஆண்டுகளில் அந்த அணியை வெற்றிகரமாக வழிநடத்தினார். இப்படியான சூழலில் அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டிருப்பது என்பது எதிர்பாராத ஒரு நடவடிக்கை. அவரது தலைமையில் குஜராத் டைடன்ஸ் அணி ஐபிஎல்லில் மிகவும் நிலையான அணியாக இருந்தது.

குஜராத் அணியின் முதல் தேர்வாக அப்போது ஜடேஜா தான் இருந்தார். ஆனால் அவரை சிஎஸ்கே விட்டுக் கொடுக்காததால் ஹர்திக் பாண்டியாவை தூக்கியது குஜராத் அணி. அறிமுகமான முதல் தொடரிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இருப்பினும் அவர் மும்பை அணிக்கு திரும்பியதில் பெரும் மகிழ்ச்சி என இப்போது தெரிவித்திருக்கிறார். பாண்டியாவின் முக்கிய கிரிக்கெட் வாழ்க்கை 2015 -ல் தொடங்கியது. MI அவரின் திறமைக்காக தேர்ந்தெடுத்தது. 

அப்போதிருந்து, அவர் மிக வேகமாக வளர்ந்து இந்தியாவில் தவிர்க்க முடியாத சொத்தாக தன்னை மாற்றிக் கொண்டார். பாண்டியாவின் திறமைகள் சிறந்தவை மற்றும் அரிதானவை. அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியதன் உண்மையான பின்னணியை அந்த அணியின் அனலிஸ்டாக இருந்த ஹரிசங்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஹரிசங்கர் பிளாக்ஷீப் சாட் என்ற யூடியூப் சேனலில் பேசும்போது, " ஐபிஎல் ஒரு "கார்ப்பரேட் விளையாட்டு". அங்கே எதுவும் நடக்கலாம். நீங்கள் எதைக் கொடுக்கிறீர்கள் என்பதை பொறுத்து வருமானம் உங்களுக்கு கிடைக்கும். தற்போதைய கேப்டனான ரோஹித் சர்மாவின் வாரிசாக ஹர்திக்கை எம்ஐ பார்க்கக்கூடும். மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்கால கேப்டனாக ஹர்திக்கை அவர்கள் பார்க்கிறார்கள். ரோஹித் ஷர்மாவின் பதவிக்காலம் இன்னும் எவ்வளவு காலம் இருக்கும் என்று தெரியவில்லை. அவருக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக கொண்டு வர அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | பும்ரா இதை செய்தால் பவுலிங் வேகம் இரண்டு மடங்காகும் - நீரஜ் சோப்ரா அட்வைஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News