IND vs ENG 3rd Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (பிப். 15) குஜராஜ் ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. தொடர் 1-1 என சமனில் உள்ளதால் அடுத்து வரும் ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியம் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்கான வியூகங்களை தீவிரமாக வகுத்து வருகின்றன எனலாம். இரு அணிகளும் பலம்வாய்ந்தவை என்றாலும், சில பலவீனங்களும் இரு முகாம்களில் காணப்படுகின்றன.
இதில் தங்களின் பலவீனங்களை புரிந்துகொண்டு அதற்கான தீர்வை நோக்கி நகர்கிறார்களோ அவர்களே வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாக இருக்கும். இது மூன்றாவது போட்டிக்கு மட்டுமின்றி மீதம் இருக்கும் போட்டிகளுக்கும் சேர்த்துதான்.
IND vs ENG: சாதகமும் பாதகமும்...
இந்திய அணி சொந்த மண் என்ற சாதகம் இருந்தாலும், இங்கிலாந்து அணி எவ்வித அழுத்தமும் இன்றி போட்டிகளை எதிர்கொண்டு வருவது இந்திய அணிக்கு சற்று தலைவலியாக இருக்கும். கடந்த போட்டியில் 400 ரன்கள் இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து வீரர்களின் பாய்ச்சல் இந்திய அணிக்கு சற்று பயத்தையே வரவழைத்திருக்கும்.
பாஸ்பால் என்ற துணிசசலான அணுகுறை இங்கிலாந்து அணிக்கு சாதகம் என்றாலும், இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சு இங்கிலாந்து வீரர்களுக்கு சற்று கடினமானதாகவே அமைகிறது. மேலும், இங்கிலாந்து பந்துவீச்சு அனுபவமின்மையுடன் காணப்படுகிறது. லீச்சின் காயம் இங்கிலாந்து அணிக்கு நிச்சயம் பின்னடவைதான். ஆனால், இதுபோன்றவையை இரு அணிகளும் எப்போதோ கடந்துவிட்டன.
IND vs ENG: அனுபவமும் அனுபவமின்மையும்...
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பது போன்று இந்தியாவின் மிடில் ஆர்டரும் அனுபவமின்றியே காணப்படுகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், பேட்டிங் முழு பலத்துடன் இருந்தால் போதும் என இங்கிலாந்தும், பந்துவீச்சும் அதிமுக்கியம் என இந்தியாவும் இந்த தொடரை அணுகுகின்றன. இந்திய அணிக்கு விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் இல்லாதது சற்று கவலைப்பட வேண்டியதுதான்.
அப்படியிருக்க வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் துணை கேப்டன் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என சில நாள்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது, அவரின் வேலைப்பளுவை நிர்வகிக்கும் வகையில் இந்திய அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. பும்ரா காயத்தால் அவதிப்பட்டு ஒரு நீண்ட இடைவேளைக்கு பின் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அணிக்கு திரும்பினார்.
IND vs ENG 3rd Test: பும்ராவுக்கு ஓய்வு?
அன்றைய போட்டியில் இருந்து தற்போது வரை தொடர்ந்து விளையாடி வரும் பும்ராவுக்கு ஓய்வும் அவசியம் என கூறப்படுகிறது. கடந்த போட்டியில் சிராஜை அமரவைத்ததை போல் இப்போட்டியில் பும்ரா பெவிலியனில் அமரவைக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆகாஷ் தீப், சிராஜ், முகேஷ் குமார் ஆகியோர் ஸ்குவாடில் இருந்தாலும், பும்ராவே சீனியராக உள்ளார். டி20இல் பும்ரா இருப்பாரா என்ற கேள்வியிருந்தாலும் ஐபிஎல், டி20 உலகக் கோப்பையும் வர இருப்பதால் அவருக்கு ஓய்வுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னாள் கேப்டன் கருத்து
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன் கூறுகையில், "உங்களின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் எப்போதும் உங்களுக்கு தேவை. சூழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லாமல் இருந்தாலும் சிறப்பாக விளையாடுபவர் பும்ரா. அப்படியிருக்கும் போது ராஜ்கோட்டிலும், தர்மசாலாவிலும் அவர் விளையாடலாம்.
அங்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற சீதோஷ்ண சூழல் இருக்கும். இங்கும் தர்மசாலாவிலும் விளையாடுவதுதான் அவருக்குப் பிடித்தமானதாக இருக்கும் நான் நினைத்திருப்பேன். ராஜ்கோட்டில் போட்டி எப்படி போகிறதோ அதன்படி பும்ராவுக்கு ராஞ்சி டெஸ்டில் (4ஆவது) ஓய்வளிக்கலாம்" என்றார். பும்ரா இந்த தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்திய அணிக்கு நிம்மதி... இந்த இங்கிலாந்து வீரர் விளையாட மாட்டார் - காரணம் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ