சாம்பியன்ஸ் டிராபி 2017: பாகிஸ்தான் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Last Updated : Jun 8, 2017, 08:50 AM IST
சாம்பியன்ஸ் டிராபி 2017: பாகிஸ்தான் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி title=

சாம்பியன்ஸ் டிராபி பி பிரிவு லீக் ஆட்டத்தில் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. 

பர்மிங்காம் நகரில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்யை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. 

சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் அணியின் ஹாசன் அலி 3, ஜூனைட் கான், இமாத் வாசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக மில்லர் 75 ரன்களை எடுத்தார். 

இதனையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 27 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபெற்றது. 

தொடர்ந்து மழை பெய்ததால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது. 

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பாகிஸ்தான் பதிவு செய்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி பி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் தலா 2 புள்ளிகளுடன் உள்ளனர். இனிவரும் போட்டிகள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News