சாம்பியன்ஸ் டிராபி : 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!!

Last Updated : Jun 16, 2017, 09:36 AM IST
சாம்பியன்ஸ் டிராபி : 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!! title=

இந்தியா 40.1 ஓவரில் 265 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. எனவே இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

8-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் , ‘பி’ பிரிவை சேர்ந்த இந்தியாவும், ‘ஏ’ பிரிவை சேர்ந்த வங்காளதேசும் மோதின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.வங்கதேச அணி நிர்ணிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தமிம் இக்பால் 70 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார், பும்ரா, கேதர் ஜாதவ் அதிகபட்சமாக 2 விக்கெட் கைப்பற்றினர்

இந்திய அணி வெற்றி பெற 265 ரன்கள் தேவை என்ற நிலையில், தனது பேட்டிங்கை தொடங்கியது.

இந்தியா 14.4 வது ஓவரில் 87 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஷிகர் தவான் 46 ரன்களில் கேட்ச் அவுட் ஆனார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன், கேப்டன் விராட் கோலி இணைந்தார். இருவரும் வங்காளதேசத்தின் பந்து வீச்சை நாலாபுறமும் அடித்து தள்ளினார்கள். இந்தியா 40.1 ஓவரில் 265 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. எனவே இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் ரோகித் சர்மா(129 பந்துகளில் 123 ரன்கள், 15 பவுண்டரிகள் ஒரு சிக்சர்) சதம் அடித்தார். விராட் கோலி (96 ரன்கள், 76 பந்துகள், 13 பவுண்டரிகள்) ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக கடந்த 14-ம் தேதி நடைபெற்ற முதல் அரை இறுதியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஜூன் 18 ஞாயிறன்று இந்தியா-பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இந்த போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

Trending News