இந்த உலகக் கோப்பையை தூக்கப்போகும் கேப்டன் இவர்தான்... பிரபல ஜோசியரின் பக்கா கணிப்பு!

World Cup 2023, Astrologer Prediction: 2023 ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி எது என்று பிரபல விஞ்ஞான ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். அவர் கணிப்புக்கு வலு சேர்க்கும் கருத்துக்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 3, 2023, 05:48 PM IST
  • இவர் கடந்த மூன்று முறையும் சரியாக கணித்துள்ளார் என கூறப்படுகிறது.
  • இவரின் கணிப்பை தனியார் ஊடகம் ஒன்றில் கூறியுள்ளார்.
  • எனவே, பெரும்பாலான ரசிகர்கள் இவரின் கருத்தை நம்புகின்றனர்.
இந்த உலகக் கோப்பையை தூக்கப்போகும் கேப்டன் இவர்தான்... பிரபல ஜோசியரின் பக்கா கணிப்பு! title=

World Cup 2023, Astrologer Prediction: உலகக் கோப்பை தொடரை விளையாடுவது எப்படி ஒரு கிரிக்கெட் வீரருக்கு மிகவும் சிறப்பான தருணமோ, அதே மாதிரிதான் ஒரு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் உலகக் கோப்பை தொடரை பார்ப்பது என்பது மிகவும் முக்கியமான தருணங்களில் ஒன்று. 1983 உலகக் கோப்பை, 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை இந்தியா கைப்பற்றியதை நேரலையில் பார்த்தவர்களுக்கு தெரியும் அந்த தருணங்கள் தங்களின் வாழ்வில் எவ்வளவு சிறப்பானது, பசுமையானது என்று.

கோப்பையை தூக்கப்போவது யார்?

சுமார் 12 ஆண்டுகளுக்கு சொந்த மண்ணில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பைகள் இந்தியாவுக்கு கிடைக்காமல் தொடர்ந்து கை நழுவி போகும் நிலையில், இந்த தொடர் இந்திய ரசிகர்களுக்கு சிறப்பானது என்பதை விட மிக மிக முக்கியமானதாகும். இந்தியா மீண்டும் கோப்பையை வெல்ல பல வாய்ப்புகள் இருந்தாலும், தொடரின் அந்த அணியின் செயல்பாடே இன்னும் நம்பிக்கையை வலுவாக்கும் எனலாம்.

அந்த வகையில், விஞ்ஞான ஜோதிடராக அறியப்படும் கிரீன்ஸ்டோன் லோபோ (Greenstone Lobo) வரும் ஐசிசி உலகக் கோப்பை குறித்த தனது கணிப்பை இப்போது தெரிவித்துள்ளார். ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைகள் மட்டுமின்றி கால்பந்து உலகக் கோப்பை, டென்னிஸ் தொடர்கள் போன்ற பல்வேறு விளையாட்டு தொடர்களிலும் இவர் சரியான கணிப்பை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | உலகக் கோப்பையில் விக்கெட் வேட்டை நடத்தப்போவது யார் யார்? - டாப் 5 வேகப்புயல்கள் இதோ!

1987ஆம் ஆண்டில் பிறந்தவர்...

குறிப்பாக, 2011, 2015, 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் இவர்கள் தான் சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்று கிரீன்ஸ்டோன் லோபோ சரியாக கணித்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், இதனை அவர் ஒரு தனியார் ஊடகம் ஒன்றுடன் பகிர்ந்துள்ளார். 

2023 உலகக் கோப்பை குறித்து கிரீன்ஸ்டோன் லோபோ (Greenstone Lobo Prediction),"1987ஆம் ஆண்டு பிறந்த கேப்டன்தான் இம்முறை உலகக் கோப்பையை வெல்வார். இதில் இரண்டு பேர் இருக்கின்றனர். ஒன்று, ஷகிப் அல் ஹாசன். அவர் வங்கதேச அணியை வழிநடத்துகிறார். அந்த அணி கோப்பையை வெல்வது அவ்வளவு எளிதானது இல்லை, வாய்ப்பும் மிக மிக குறைவு.

அந்த வகையில் மற்றொருவர் யார் என்றால் நம் ரோஹித் சர்மா. இம்முறை இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றும்" என அவர் கணிப்பை தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா 1987ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதியும், ஷகிப் அல் ஹாசன் 1987ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதியும் பிறந்துள்ளனர். 

டென்னிஸ், கால்பந்து... இப்போது கிரிக்கெட்

இந்த கணிப்பை வலுப்படுத்துவது என்னவென்றால், சில மாதங்களுக்கு முன் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர்கள் பட்டியலில் நடாலை, ஜோகோவிச் முந்தினார். இதில் நடால் 1986ஆம் ஆண்டில் பிறந்தவர், ஜோகோவிச் 1987ஆம் ஆண்டில் பிறந்தவர். 

மேலும், கால்பந்தை எடுத்துக்கொண்டால் 2018இல் கால்பந்து உலகக் கோப்பை வெல்லும் போது ஹூகோ லோரிஸ் தலைமை தாங்கினார், அவர் 1986ஆம் ஆண்டில் பிறந்தவர். அதற்கு அடுத்த கால்பந்து தொடர் கடந்தாண்டு நடைபெற்றது. அதில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டீனா அணி சாம்பியன் ஆனது. அவர் 1987ஆம் ஆண்டில் பிறந்தவர் ஆவார். 

அதேபோல், கிரிக்கெட்டை எடுத்துக்கொள்ளும்போது 2019 ஐசிசி உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கன் கேப்டனாக இருந்தார், அவர் 1986இல் பிறந்தவர். எனவே இம்முறை 1987ஆம் ஆண்டில் பிறந்தவர்தான் உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். 

மேலும் படிக்க | இந்த உலகக் கோப்பையின் டாப் 5 கோடீஸ்வர வீரர்கள் இவர்கள்தான்... லிஸ்டில் 2 இந்தியர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News